Karthi: அதற்காக நானும் சூர்யா சண்டை போடுவோம்.. கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
Suriya And Karthis Childhood: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவர் தனது அண்ணன் சூர்யாவைப் போல் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்திவருகிறார். இந்நிலையில் சிறுவயதில் அவர்கள் அதிகம் சண்டைபோடும் விஷயம் என்ன என்பது குறித்து கார்த்தி ஓபனாக பேசியுளளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

கார்த்தி மற்றும் சூர்யா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகிவருகிற்து. இவர் இறுதியாக நடிகர் நானியின் (Nani) நடிப்பில் வெளியான ஹிட் 3 (HIT 3) படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஹிட் 4 படத்தில் இவர்தான் நாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகர் கார்த்தி முழு நீல தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கார்த்தியின் அண்ணாவும், தமிழ் நடிகருமான சூர்யா (Suriya) தற்போது தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக தொடங்கியுள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா46 (Suriya) என்ற படம் தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் உருவாகிவருகிறது.
இவ்வாறு அண்ணன் சூர்யாவை தொடர்ந்து, நடிகர் கார்த்தியும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த வகையில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் நிஜவாழ்க்கையை தொடர்ந்து, சினிமாவிலும் அண்ணன் தம்பியாக சினிமாவில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, அண்ணன் சூர்யாவிற்கு தனக்கும் சிறுவயதில் அடிக்கடி சண்டை வருவது மற்றும் தனது சொந்த ஊர் பயணம் அனுபவம் பற்றி ஓபனாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் ஆர்யன் படம் ரிலீஸ்.. ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விஷ்ணு விஷால்!
நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இணைந்து இருக்கும் பதிவு :
சிறுவயதில் சூர்யாவுடன் சண்டை போடுவது குறித்து கார்த்தி பகிர்ந்த விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, “நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆனால் பள்ளி விடுமுறை என்றாலே நாங்கள் எங்களின் அப்புச்சி வீட்டிற்கு சென்றுவிடுவோம். அதற்காகவே எப்போது விடுமுறை வரும் என நாங்கள் காத்திருப்போம். எங்ககளின் சொந்த ஊரு, திருப்பூரை தாண்டி இருக்கும் கவுண்டம்பாளையம்தான். சிறுவயதில் நாங்கள் எங்களுக்கு விடுமுறை என்றாலே ரயிலில் புறப்பட்டுவிடுவோம். அப்போது திருப்பூரில் இறங்கியபிறகு, நான், அண்ணன் சூர்யா, அம்மா மற்றும் தங்கை எல்லோரும் காரில் செல்வோம். அப்பா அப்போது எங்களுடன் வரமாட்டாரு.
இதையும் படிங்க: பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் நரேன்!
அந்த காரில் யார் முன்னாடி இருக்கும் இருக்கையில் அமர்வது என எனக்கும் அண்ணன் சூர்யாவிற்கும் அடிக்கடி சண்டை வரும். இருவருக்கும் சண்டை வேண்டாம் என, எங்கள் இருவரையும் முன்னாடி இருக்கும் இருக்கையில் அமர வைத்துவிடுவார்கள். அப்போது காரில் செல்லும்போது எங்கள் ஊர் பெயர்போட்ட பலகை தெரிந்தால் அவ்வளவு சந்தோசம் வரும். அந்த சந்தோசத்திற்கு இணையாக எதுவும் இல்லை. எங்களின் அப்புச்சி ஊருக்கு போவது ஒரு சொர்க்கம்” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.