ஒவ்வொரு தாமதத்திற்கும் ஒரு காரணம் உண்டு… ஜன நாயகன் குறித்து பேசிய கார்த்தி!
Karthi about Jana Nayagan Movie: நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் வா வாத்தியார். இந்தப் படத்தின் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் நடிகர் கார்த்தி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

கார்த்தி
தமிழ் சினிமாவில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் எத்தனை புதுப் படங்கள் வெளியாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனைக் காரணமாக வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தினை சென்சார் பிரச்சனை காரணமாக படம் ஒத்திவைக்கப்பட்டத்திற்கு எதிராக தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் நடிகர்கள் இயக்குநர்கள் என பலரும் தங்களது ஆதவரை ஜன நாயகன் படத்திற்கு தெரிவித்ததுடன் சென்சார் குழுவின் போக்கை கண்டித்தும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜன நாயகன் படக்குழுவும் சென்சார் சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. ஆனால் அங்கு வழக்கின் விசாரணை தேதியை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனைத் தொடர்ந்து படக்குழு உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் இன்று வழக்கின் விசாரணையில் அடுத்தக்கட்ட விசாரணையை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் காரணமாக படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்பது உறுதியாகி உள்ளது.
ஒவ்வொரு தாமதத்திற்கும் ஒரு காரணம் உண்டு:
இந்த நிலையில் சமீபத்தில் வா வாத்தியார் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கார்த்தி ஜன நாயகன் படம் குறித்து பேசியுள்ளார். அதில், ஒவ்வொரு தாமதத்திற்கும் ஒரு காரணம் உண்டு. ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், அது சரியான நேரத்தில் நிச்சயமாக வெளியாகும். காலம் எப்போதும் எல்லாவற்றையும் அழகாகத் திட்டமிடுகிறது. மேலும் பொங்கல் வெளியீடுகளாக வரும் அனைத்துப் படங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் என்று அந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ட்ரெண்டை ஃபாலோ செய்வோம்… கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
இணையத்தில் கவனம் பெறும் கார்த்தியின் பேச்சு:
#Karthi about #JanaNayagan
– Every delay has a reason though JanaNayagan is postponed, it will surely release at the right time ⏳
– Time always plans things beautifully — best wishes to all the Pongal releases 🧨#VaaVaathiyaarpic.twitter.com/FUYCULXimx— Movie Tamil (@_MovieTamil) January 13, 2026
Also Read… TTT Movie: அரசியல் காமெடி கதையில்… வெளியானது ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட ட்ரெய்லர்!