AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thug Life: தக் லைஃப் ரிலீஸ்.. தியேட்டருக்கு தீ வைப்போம்.. கடும் எச்சரிக்கை!

Karnataka Thug Life Movie Release Ban : நடிகர் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழியைப் பற்றி தவறாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கர்நாடக கட்சித் தலைவர் டிஏ நாராயண கவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Thug Life: தக் லைஃப் ரிலீஸ்.. தியேட்டருக்கு தீ வைப்போம்.. கடும் எச்சரிக்கை!
தக் லைஃப்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 May 2025 14:39 PM IST

இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam)  இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 (Ponniyin Selvan 2) படத்தைத் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் நிறைந்த மாறுபட்ட திரைக்கதைகளுடன் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதையைக் கமல்ஹாசனும் (Kamal Haasan) இணைந்து எழுதியுள்ளார். மணிரத்னத்தின் இயக்கத்திலும், நடிகர் கமல்ஹாசனின் எழுத்திலும், நடிப்பிலும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) முக்கிய நாயகனாக நடித்துள்ளார். இப்படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் ஒருபுறம் நடந்து வருகிறது. கடந்த 2025, மே 24ம் தேதியில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல், கன்னட (Kannada) மொழியைப் பற்றிப் பேசி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

இது குறித்தது பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பலரும் கூறிவந்தனர். இதைத் தொடர்ந்து கமல் மன்னிப்பு கேட்காத நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தினை கர்நாடகாவில் வெளியிடத் தடை விதித்துள்ளனர்.

இது தொடர்ந்து கமலின் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியானால் திரையரங்கத்தையே தீ வைப்பார்கள் என கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் டி.ஏ. நாராயண கவுடா எச்சரித்துள்ளார். தற்போது இந்த தகவலானது மக்கள் மத்தியில் தீயாகி பரவி வருகிறது.

கர்நாடக திரையரங்கிற்கு டி.ஏ. நாராயண கவுடா எச்சரிப்பு :

கடந்த 2025, மே 30 அன்று, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கவுடா, கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படத்தைக் கர்நாடக திரையரங்குகளில் வெளியிட்டால், அந்த திரையரங்குகளையும் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் தியாக பரவி வருகிறது.

கமல் தக் லைப் படத்திற்குத் தடை :

நடிகர் கமல்ஹாசன் கிளப்பிய சர்ச்சை :

கடந்த 2025, மே 24ம் தேதியில், தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாய் ராம் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் கலந்துகொண்டார். அந்த நிழச்சியில் பேசிய கமல்ஹாசன், “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று பேசியிருந்தார். இது கன்னட மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொஞ்சம் கூட பயப்படாத நடிகர் கமல் ஹாசன், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை, மிரட்டல்களுக்கு நான் பயப்படவில்லை, மன்னிப்பு கேட்கவும் மாட்டேன்” என்று பேசியிருந்தார். இந்நிலையில் இந்த கன்னட மொழி சர்ச்சையானது நீண்டுகொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து கர்நாடக தக் லைஃப் பட ரிலீஸ் தொடர்பான விவகாரம் இன்னும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us