அனைவரும் எதிர்பார்த்த கூட்டணி.. கமல்ஹாசனுடன் இணைகிறாரா வெற்றிமாறன்?
Kamal Haasan And Vetrimaaran: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் படங்ககள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறனுடன் புது படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

வெற்றிமாறன் மற்றும் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தனது சிறுவயது முதலே சினிமா துறையில் கால்பதித்த நிலையில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இருந்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநராகவும் சில படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த படமானது கடந்த 2025 ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது. இதை அடுத்தாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரீவ் (Anbariv) இயக்கத்தில் புது படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படமானது KH237 என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் ஷூட்டிங்கும் தொடங்கவுள்ளது. அந்த வகையில் கமல்ஹாசன், வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
இதையும் படிங்க: பராசக்தி அந்த மாணவரின் வாழ்க்கை கதை இல்லை – இயக்குநர் சுதா கொங்கரா
வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் :
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சிலம்பரசனை வைத்து அரசன் என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படமானது தனுஷின் வட சென்னை படத்தின் உலகத்தில் உள்ள ஒரு கதையை மையமாக கொண்டு தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2026ல் வெளியாகவிருக்கும் தென்னிந்திய பிக் பட்ஜெட் படங்கள் என்னென்ன தெரியுமா?
இப்படத்தை முடித்த கையேடு கமல்ஹாசனை வைத்து வெற்றிமாறன் படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து வெற்றிமாறன் புது படத்திற்கான கதையை கூறியுள்ளாராம்,. இது குறித்து கமல் தீவிர யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த கூட்டணி நிஜமானால் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் உருவாகும் என கூறப்படுகிறது.
KH237 படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
Welcome to the world of Kamal Haasan#KamalHaasan #KHAA#HBDKamalHaasan#ActioninAction
A Film By @anbariv@ikamalhaasan #Mahendran
Music Composer – @jakes_bejoy
DOP – #SunilKS
Editor – #ShemeerKM
Production Designer – #VineshBanglan
Publicity Designer – @tuneyjohn… pic.twitter.com/t35EB21Qzx— Raaj Kamal Films International (@RKFI) November 7, 2025
இந்த KH237 படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பரீவ் இயக்கவுள்ள நிலையில், மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கவுள்ளார். இந்த படமானது முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.