அதுக்கு ஒரு தைரியம் வேண்டும் என்று சுதா கொங்கரா கூறினார் – ரவி மோகன் பேச்சு
Actor Ravi Mohan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மூத்த திரைப்படத் தொகுப்பாளர் ஏ. மோகன் அவர்களின் இளைய மகன் தான் நடிகர் ரவி மோகன். வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் ரவி மோகன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரை சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்துவைத்தது இவரது அண்ணன் மோகன் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து தனது திறமையின் காரணமாக முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆன ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர், இயக்குநர் என்ற புது அவதாரத்தையும் எடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்களையும் ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து வெளியாகும் படங்கள் மீது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது போல அவர் வில்லனாக நடித்துள்ள பராசக்தி படத்தினையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தில் எப்படி நடித்தேன் என்பது குறித்தும் இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தில் நடிப்பது குறித்து என்ன சொன்னார் என்றும் ரவி மோகன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அதுக்கு ஒரு தைரியம் வேண்டும் என்று சுதா கொங்கரா கூறினார்:
அதன்படி நடிகர் ரவி மோகன் பேசியதாவது, இயக்குநர் சுதா மேம் எனக்கு போன் செய்து, பராசக்தி திரைக்கதையைப் படிக்கும்படி சொன்னார். நான் அந்தப் பாத்திரத்தை ஏற்க மாட்டேன் என்று அவர் நினைத்தார். ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன். அதை ஒப்புக்கொள்ள தைரியம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
Also Read… அமித்தை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது இவர்தான் – கசிந்தது தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#RaviMohan: Sudha Mam called me and asked to read the #Parasakthi script. She thought I would not accept the role. But i accepted😄. She mentioned that, it needs guts to accept it💪#SudhaKongara: It will be very different from all his characters & grey🔥 pic.twitter.com/BbLZ4mglnP
— AmuthaBharathi (@CinemaWithAB) December 28, 2025
Also Read… அனிருத், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ குறித்து விஜய் சொன்ன சுவாரஸ்ய விசயம்… என்ன தெரியுமா?