Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட முதல்வரால் பிரச்னை.. அன்பு மன்னிப்பு கேட்காது – கன்னடம் குறித்த சர்ச்சைக்கு கமல்ஹாசன் விளக்கம்

Kamal Haasan Clarifies Kannada Language Controversy : தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற தக் லைஃப் பட நிகழ்ச்சியில் பேசிய அவர், எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையே நான் சொன்னேன். இந்த பிரச்னையும் தக் லைஃபையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.

கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட முதல்வரால் பிரச்னை.. அன்பு மன்னிப்பு கேட்காது –  கன்னடம் குறித்த சர்ச்சைக்கு கமல்ஹாசன் விளக்கம்
கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 May 2025 09:15 AM

மணிரத்னம் (Maniratnam) இயக்கத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan), சிலம்பரசன் டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப்(Thug Life) பட இசை வெளியீட்டு விழா கடந்த மே 24, 2025 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்றும் அவருக்காகவே இந்த விழாவில் கலந்துகொண்டதாகவும் பேசினார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது நடிகர் சிவராஜ்குமாரைக் குறிப்பிட்டு, ”சிவராஜ்குமார் இங்கே வந்திருக்கிறார். அவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பத்தை சேர்ந்தவர்.  அவர் எனக்காக வந்திருக்கிறார். அதனால் நான் பேச்சைத் துவங்கும்போது உயிரே உறவே தமிழே எனத் துவங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் அவரது மொழி. எனவே நீங்களும் அதில் உட்படுவீர்கள் என்றார்.

நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

 

கேரளாவில் நடைபெற்ற தக் லைஃப் பட புரமோஷன் நிகழ்ச்சியில் இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அனைவருக்குமானது. இது பிற மாநிலங்களிலும் இருக்கலாம். நான் இல்லையென சொல்லவில்லை. ஆனால் எங்களுக்கு மேனனும், ரெட்டியும் கன்னட ஐயங்காரும் பலரும் முதல்வராக இருந்திருக்கிறார்கள். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை பிரச்னை வந்தபோது கூட எனக்கு ஆதரவாக கன்னடர்கள் இருந்தார்கள்.

வடக்கிலிருந்து பார்த்தால், அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். தென் குமாரியில் இருந்து பார்த்தால் நான் சொல்வதே சரி. இதற்கு இன்னொரு கோணமும் இருக்கும். எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையே நான் சொன்னேன். இந்த பிரச்னையும் தக் லைஃபையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்களுக்கு இது பற்றிய படிப்பினை இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே இந்த பிரச்னை பற்றிய ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் விட்டுவிடுவோம். இது என் பதில் அல்ல. விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது என்றார்.

கர்நாடகா முதல்வர் எதிர்ப்பு

 

கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக கன்னட அமைப்பினர் அவரை எதிர்த்து கண்டனம் எழுப்பியதுடன் தக் லைஃப் பட போஸ்டரையும் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கமல்ஹாசனுக்கு அது தெரியவில்லை என கண்டனம் தெரிவித்திருந்தார்.