விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

Kalaipuli S Thanu talks about Train movie release date: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் ட்ரெய்ன். இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

ட்ரெயின்

Published: 

01 Mar 2026 13:05 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள படம் ட்ரெயின். இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் நாசர், ஸ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ்.ரவிக்குமார், சம்பத் ராஜ், கலையரசன், இரா.தயானந்த், ப்ரீத்தி கரண் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் இருந்து முன்னதாக பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ட்ரெயின் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டையும் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் எப்போது?

‘ட்ரெயன்’ படத்தின் இறுதிக்கட்ட CG பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, மேலும் ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். மிஷ்கின் ஒரு சிறந்த இயக்குனர், விஜய் சேதுபதி ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக வெளிப்படப் போகிறார். ‘ட்ரெயின் கழிப்பறைக்குள்’ உட்பட, ரயிலில் தீவிரமான சண்டைக் காட்சிகள் உள்ளன. படத்தைப் பார்த்த பிறகு, இந்தக் காட்சிகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்று அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

நாங்கள் ஒரு 4×4 கண்ணாடி அறையை உருவாக்கி, அதற்குள் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினோம். இந்தக் காட்சி சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ட்ரெயின் ஒரு இருக்கை முனை த்ரில்லர். கதை மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலான பயணத்தின் போது அமைக்கப்பட்டுள்ளது, அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை மையமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read… Shankar: மிகவும் அருமையான படம் – தாய் கிழவி படத்தை பாராட்டிய இயக்குநர் சங்கர்!

இணையத்தில் வைரலாகும் தயாரிப்பாளர் தாணுவின் பேச்சு:

Also Read… பிரித்விராஜ் சுகுமாரனின் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தின் பெயர் சந்தோஷ் ட்ராஃபி – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Follow Us
Related Stories
அப்சரா பென்சிலுக்கும் நட்ராஜ் பென்சிலுக்கும் உள்ள வித்தியாசம் 90ஸ் கிட்ஸ்களுக்கு தான் தெரியும் – தெலுங்கில் வெளியான இந்த 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக் தொடரை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்
நடிகர் மோகன்லாலின் 366-வது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் போஸ்டர்
தனுஷின் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல… 21 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் சச்சின் படம்!
KHxRK போன்ற ஒரு படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு ஒரு சிறப்பான தருணம் – அனிருத்
லப்பர் பந்து படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது – எஸ்.ஜே.சூர்யா சொன்ன விசயம்
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி