ஜனநாயகன் படம் வெளியாவதில் மேலும் ஒரு சிக்கல்? படம் வெளியாகுமா?

Jana Nayagan faces ECI hurdle: தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ஜனநாயகன் படத்துக்கு தேர்தல் ஆணையத்தால் புது சிக்கல் வரலாம் என கூறப்படுகிறது. இதனால் படத்தின் வெளியீடு மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகன் படம் வெளியாவதில் மேலும் ஒரு சிக்கல்? படம் வெளியாகுமா?

விஜய்

Published: 

03 Feb 2026 20:53 PM

 IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்படம் புதிய சிக்கலை எதிர்கொள்ளவிருக்கிறது. படத்தின் வெளியீடு தொடர்பாக தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ள நிலையில் தற்போது தேர்தல் ஆணையமும் இந்தப் படத்துக்கு எதிராக திரும்பும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த தணிக்கை துறையினர் சில சிறிய மாற்றங்கள் மேற்கொண்டால் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் படம் திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 9, 2025 அன்று வெளியாகவில்லை.

ஜனநாயகன் படத்துக்கு புதிய சிக்கல்

இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டடு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருப்பதால், அவர் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் ஒரு அரசியல் வசனம் இருந்தால் கூட அது தேர்தல் பிரச்சார படமாக கருதப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : கர முதல் D57 வரை.. தனுஷின் புது படங்களின் இசையமைப்பாளர்கள் யார் யார் தெரியுமா?

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான நமோ, நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது. காரணம் அது தேர்தல் பிரச்சாரமாக மாறக்கூடும் என தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த நிலை ஜனநாயகன் படத்துக்கும் ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும் தேர்தலில் விஜய் போட்டியிடும் பட்சத்தில் ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : சிலம்பரசன் பிறந்த நாளில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் சூப்பர் ஹிட்டான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்க்காக சில அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகள் சேர்க்கப்ப்டடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தெலுங்கில் இல்லாத அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்ட காட்சிகளும் வசனங்களும் ஜனநாயகன் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதுவே படத்துக்கு சிக்கலாக மாறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..