இன்பன் உதயநிதி வழங்கும் இட்லி கடை படம்… வைரலாகும் போஸ்டர்

Idli Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்தப் படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் தமிழ் நாடு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இன்பன் உதயநிதி வழங்கும் இட்லி கடை படம்... வைரலாகும் போஸ்டர்

இன்பன் உதயநிதி

Published: 

03 Sep 2025 20:20 PM

 IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) தற்போது நடித்து இயக்கி உள்ள படம் இட்லி கடை. தனுஷின் 52-வது படமான இதனை அவரே எழுதி, இயக்கி நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சத்யராஜ், சமுத்ரகனி, இளவரசு, வடிவுகரசி மற்றும் இந்துமதி மணிகண்டன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் இட்லி கடை படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர் பார் நிறுவனம் இரண்டும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமைகள் படுஜோராக விற்பனையாகி வருகின்றது.

இட்லி கடை படத்தை தமிழகத்தில் வெளியிடும் இன்பன் உதயநிதி:

அந்த வகையில் தற்போது தமிழ் நாட்டின் வெளியீட்டு உரிமையை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள போஸ்டரில் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் கீழ் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி பெயர் இருந்தது.

மேலும் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இட்லி கடை படத்தை வெளியிடுகிறது. மேலும் இன்பன் உதயநிதியின் இந்த புது பயணத்திற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்து இருந்தார். இதன் மூலம் இனி ரெட் ஜெயண்ட் மூவிஸை இன்பன் உதயநிதி தான் பார்த்துக்கொள்ளப் போகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிகிறது.

Also Read… வித்தியாசமான கதை.. கம்மி பட்ஜெட்டில் சூப்பர் படம்.. லோகா சாப்டர் 1 படம் ஓடிடி ரிலீஸ் எப்போது?

நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சில நினைவுகள் காலத்தால் அழியாதவை… வைரலாகும் மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டாகிராம் பதிவு!