நீ அந்த விசயத்தில் ஹீரோவா இருக்கனும்… பிக்பாஸில் கம்ருதினுக்கு பார்வதியின் அம்மா கொடுத்த அட்வைஸ்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 12-வது வாரம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதில் மக்களும் போட்டியாளர்களும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த பார்வதியின் அம்மா வீட்டிற்குள் வந்துள்ளனர்.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து எல்லா சீசன்களிலும் போட்டியாளர்களும் பார்வையாளர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் டாஸ்க் ஃப்ரீஸ் டாஸ்க். இந்த டாஸ்கில் வீட்டில் உள்ள அனைத்துப் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வருவார்கள். பல போட்டியாளர்கள் இந்த டாஸ்க் முடியும் வரையுமாவது தாங்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கமாகவே உள்ளது. இந்த நிலையி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 12-வது வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். அதன்படி இந்தப் போட்டியில் கனி திரு, கம்ருதின், சபரி, அரோரா, திவ்யா, விக்ரம், சுபிக்ஷா, அமித், கானா வினோத், சாண்ட்ரா மற்றும் பார்வதி என 11 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் இந்த வாரத்திற்கான வீட்டு தலையாக உள்ள கம்ருதினை தவிற மற்ற அனைவரும் பிக்பாஸில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசசில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை வீட்டில் உள்ள கானா வினோத், அமித், சாண்ட்ரா, திவ்யா மற்றும் கனி ஆகியோரின் குடும்பத்தினர் உள்ளே வந்துள்ளனர்.
பிக்பாஸில் கம்ருதினுக்கு பார்வதியின் அம்மா கொடுத்த அட்வைஸ்:
இந்த நிலையில் இந்த ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களும் பார்வையாளர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்து இருந்தது பார்வதியின் அம்மாவைதான். அவர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். தொடர்ந்து அவர் வீட்டில் உள்ள அனைவரிடம் பேசிய பிறகு கம்ருதினடும் பேசிகிறார். அதில் அனைவருக்கும் உண்மையாக இருக்கும் விசயத்தில் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கம்ருதினிடம் கூறுகிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் எல்லாரும் அவங்க அவங்க கேம் ஆடுறாங்க… அமித் மனைவி ஓபன் டாக்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day81 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/4G8He5WuaA
— Vijay Television (@vijaytelevision) December 25, 2025
Also Read… பராசக்தி படத்திற்காக மிகவும் மெனக்கெட்டார் ஸ்ரீலீலா – இயக்குநர் சுதா கொங்கரா