இதயப்பூர்வமான கதை வருவதற்கு இன்னும் பத்து நாட்கள் உள்ளன – இட்லி கடை படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

Idli Kadai Movie Poster : நடிகர் தனுஷின் நடிப்பில் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதயப்பூர்வமான கதை வருவதற்கு இன்னும் பத்து நாட்கள் உள்ளன - இட்லி கடை படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

இட்லி கடை

Published: 

21 Sep 2025 20:02 PM

 IST

தமிழக ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை (Idli Kadai Movie). நடிகர் தனுஷ் இயக்கி நடித்து உள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு இசை வெளியீட்டு விழா நடைப்பெற்ற நிலையில் நேற்று 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இட்லி கடை படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் இது பக்கா ஃபேமிலி செண்டிமெண்ட் நிச்சயமாக திரையரங்குகளில் சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெறும் என்று தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி ட்ரெய்லரில் நடிகர் சத்யராஜின் பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஹெட் செஃபாக நடிகர் தனுஷ் நடித்துள்ளார். அவரது அப்பாவாக ராஜ்கிரணும் அம்மாவாக நடிகை கீதா கைலாசமும் நடித்துள்ளனர். இவர்கள் ஊரில் ஒரு சிறிய இட்லி கடையை வைத்து நடத்தி வருகின்றனர். அந்த கடை அந்த ஊரிற்கான அடையாளமாக இருக்கிறது. ராஜ்கிரண் தனக்கு பிறகு இந்த கடையை யார் எடுத்து நடத்துவார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பின்னால் தனுஷே அந்த இட்லி கடையை எடுத்து நடத்தி வருகிறார். இதனால் சத்யராஜின் மகன் கடுப்பாகி அவரை அழிக்க நினைக்கிறார் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.

புதிய போஸ்டரை வெளியிட்டது இட்லி கடை படக்குழு:

இந்த நிலையில் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இட்லி கடை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் இப்படிதான் உருவாச்சு – எஸ்.ஜே.சூர்யா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட்டை கொடுத்த படக்குழு