அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள வா வாத்தியார் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Vaa Vaathiyaar Movie OTT Review: நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் வா வாத்தியார். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள வா வாத்தியார் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

வா வாத்தியார்

Published: 

28 Jan 2026 20:19 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வா வாத்தியார். கடந்த 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு இந்த வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்டு உடனே வெளியானது போல ஓடிடியிலும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியானது என்றால் அந்தப் படம் ஒரு மாதத்திற்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாவது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த வா வாத்தியார் படம் திரையரங்களில் வெளியாகி 15 நாட்களிலேயே ஓடிடியில் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தினை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கி இருந்த நிலையில்  நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், நிழல்கள் ரவி, ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், ரமேஷ் திலக், கருணாகரன், பாபி சிம்ஹா, வடிவுக்கரசி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

கார்த்தியின் வா வாத்தியார் படம் எப்படி இருக்கு?

நடிகர் கார்த்தியின் தாத்தாவான நடிகர் ராஜ்கிரண் தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருக்கிறார். இப்படி இருக்கு நிலையில் எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்ற காரணத்தால் தியேட்டரில் அவரது படத்தைப் நள்ளிரவு ரசிகர்களுடன் இணைந்து பார்த்து வருகின்றார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அதிகாளை 3.30 மணிக்கு உயிரிழந்ததாக செய்து வெளியாகி அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் போது ராஜ்கிரணுக்கு பேரன் பிறந்துள்ளதாக செய்தி வருகிறது. அந்த பேரன் எம்.ஜி.ஆர். இறந்த அதே நேரத்தில் பிறந்துள்ளதால் ராஜ்கிரண் அவர் எம்.ஜி.ஆரின் மறு உருவம் என்று நினைத்து அவரை எம்.ஜி.ஆரைப் போலவே வளர்க்க நினைக்கின்றார்.

Also Read… நடிகை தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட தேவதை – இயக்குநர் அட்லி

சிறு வயதில் அதிகமாக எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து வளர்ந்தாளும் ஒரு கட்டத்தில் நம்பியார் மீது ஆர்வம் கொள்கிறார் கார்த்தி. தனது தாத்தாவின் ஆசைக்காக போலீஸாகும் கார்த்தி வசூல் மன்னனாக வலம் வருகிறார். கார்த்தி எம்.ஜி.ஆர் போல இல்லாமல் தவறான பாதையில் நடப்பதை தெரிந்ததும் ராஜ்கிரண் மன உழைச்சலில் உயிரிழந்துவிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக்கு மல்லிடிபில் பர்சினாலட்டி என்பது போல இரவில் எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரமான வாத்தியாராகவும், பகலில் எதுவும் தெரியாமல் இருக்கிறார். கார்த்தி வாத்தியாராக மக்களுக்கு நல்லது செய்து வரும் நிலையில் இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… 7 வருடங்களுக்குப் பிறகு இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் டெஸ்ட் ஷூட் வீடியோ

ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்
பைக்கில் செல்வது தோனி - கோலியா? வைரலாகும் வீடியோ
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?