கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Cinema: கோலிவுட் சினிமாவில் புதுப் படங்களின் வரவு அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகங்களும் தற்போது தொடர்ந்து தயராகி வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மட்டும் பலப் படங்கள் இரண்டாம் பாகத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட் இதோ!

படங்கள்

Published: 

02 Sep 2025 13:56 PM

இந்திய சினிமாவைப் பொருத்தவரை பார்ட் 2 படங்கள் என்பது மிகவும் சாதரண விசயம். குறிப்பாக பார்ட் 2, பார்ட் 3, பார்ட் 4, பார்ட் 5 என இந்தி சினிமாவில் படங்கள் வெளியாவது அனைவரும் அறிந்தது. இந்த மாதிரி வெற்றி அடைந்த படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது ரசிகர்களுக்கு முதலில் நன்றாக இருந்தாலும் இந்தி சினிமா மாதிரி இந்தனை பாகங்களை எடுப்பது சற்று வருத்தத்தை அளித்தது. காரணம் புதுப் படமாக இல்லாமல் சீரியல் போல அடுத்தடுத்து எடுப்பது அவர்களிடம் படம் எடுக்கும் அளவிற்கு கதை இல்லை என்பதால் அப்படி எடுக்கிறார்கள் என்ற கருத்தும் மக்களிடையே நிலவுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் பார்ட் 2 படங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அப்படி படம் 2 பாகங்களாக வரப்போகிறது என்றால் அதனை முன்பே அறிவித்து விடுவார்கள்.

இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமாவில் பல நூற்றுக்கணக்கான புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னதாக கோலிவுட் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சிலப் படங்களின் அடுத்தப் பாகங்கள் தயாராகி வருவது குறித்து தொடர்ந்து படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி வரும் பார்ட் 2 படங்களில் பட்டியளை தற்போது பார்க்கலாம்.

ஜெயிலர் 2 முதல் கட்டா குஸ்தி வரை – லிஸ்ட் இதோ:

அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கூலி படத்தை முடித்துவிட்டு தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிசியாக இருக்கிறார் ரஜினிகாந்த்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தின் பாகம் இரண்டு படத்தின் அறிவிப்பு வெளியாகி தற்போது பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது கட்டா குஸ்தி மற்றும் மீசைய முறுக்கு படங்களின் இரண்டாம் பாகங்களும் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் அர்ச்சனா – அருண் திருமண நிச்சய செய்தி!

கட்டா குஸ்தி 2 குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒன்னுமே இல்லாத போதும் என்ன நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க… மனைவி ஆர்த்தி குறித்து நெகிழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்