Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பரபரப்பான காட்சிகளுடன் அதர்வாவின் தணல் படத்தின் ட்ரெய்லர் இதோ!

Thanal Movie Official Trailer | தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பல ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் அதர்வா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் அதர்வாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள தணல் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

பரபரப்பான காட்சிகளுடன் அதர்வாவின் தணல் படத்தின் ட்ரெய்லர் இதோ!
தணல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2025 19:27 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆன நடிகர் அதர்வா தற்போது 15 ஆண்டுகளாக சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அதர்வா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டிஎன்ஏ. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அதர்வாவின் நடிப்பில் தற்போது தணல், அட்ரெஸ், பராசக்தி, இதயம் முரளி என தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் நிலையில் இதில் அதர்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மற்றப் படங்களில் அதர்வா நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறை அதிகாரியாக மாஸ் காட்டும் அதர்வா:

இந்த நிலையில் நடிகர் அதர்வாவின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளப் படம் தணல். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா உடன் இணைந்து நடிகர்கள் அஷ்வின் காக்குமானு, லாவண்யா திரிபாதி, ஷரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

காவல்துறை அதிகாரியாக இருக்கும் நடிகர் அதர்வா வில்லனாக இருக்கும் அஸ்வினுக்கு எதிராக போராடுகிறார் என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்தப் படம் வருகின்ற 12-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sivakarthikeyan : அனிருத்தின் திருமணம் எப்போது? சிவகார்த்திகேயன் சொன்ன ஆச்சர்ய பதில் இதோ!

தணல் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சத்தமே இல்லாமல் நடந்த விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயம்… வைரலாகும் போட்டோஸ்!