40 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்ட கலக்கி பாடல் – கொண்டாட்டத்தில் படக்குழு

GV Prakash Kumar praised the Youth movie team: தமிழ் சினிமாவில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் யூத். இந்தப் படத்தில் இருந்து வெளியான முட்ட கலக்கி பாடல் வீடியோ தற்போது 40 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

40 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்ட கலக்கி பாடல் - கொண்டாட்டத்தில் படக்குழு

முட்ட கலக்கி

Published: 

18 Mar 2026 12:49 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை மட்டும் இன்றி இளம் தலைமுறையினரின் முயற்சியையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் சமீப காலமாக அறிமுக இயக்குநர்களின் படங்கள் தொடர்ந்து ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர்கள் அடுத்தடுத்து பல முன்னணி நாயகன்களின் படங்களை இயக்கவும் ஒப்பந்தம் ஆகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இளைஞர்கள் பலர் ஒன்றாக இணைந்து உருவாக்கி உள்ள படம் தான் யூத். இந்தப் படத்தை கென் கருணாஸ் எழுதி, இயக்கியது மட்டும் இன்றி நாயகனாகவும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரிடம் படத்திற்காக இசையமைக்க வேண்டும் என்று கென் கருணாஅஸ் மற்றும் அவரது குழு சென்று கேட்கும் வீடியோவே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து முன்னதாக வெளியான முட்ட கலக்கி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

40 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்ட கலக்கி பாடல்:

யூத் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இருது முன்னதாக முட்ட கலக்கி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலை கென் கருணாஸ் எழுதி அவரே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவில் முழுக்க முழுக்க அறிமுக நடிகர்கள் நடிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் பாடல் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… நான் சந்தித்த பெண்களிலேயே மிகவும் கண்ணியமானவள் த்ரிஷா – குஷ்பு சுந்தர்

40 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்ட கலக்கி பாடல்:

Also Read… Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் கேமியோ வேடத்தில் கோலிவுட் பிரபலம்.. அட இவரா?

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி