ஜூலை மாதம் திரையரங்குகளில் வரிசைக்கட்டும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ
July Month Theatre Rlease: 2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் படங்கள் தொடர்ந்து வரிசைக்கட்டி வெளியாகி வருகின்றது. அதன்படி ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 முதல் 15 படங்களாவது தமிழ் சினிமாவில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் ஜூலை 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பறந்து போ: இயக்குநர் ராம் (Director Ram) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா (Mirchi Shiva) நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மாஸ்டர் மிதுல் ரியான், விஜய் யேசுதாஸ், அஜு வர்கீஸ், ஜெஸ்ஸி குக்கு, தியா, பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். மனித உணர்வுகளுக்கு முக்கியதுவம் கொடுத்து படங்களை இயக்கும் இயக்குநர் ராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளதால் படம் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பறந்து போ படத்தின் டீசர்:
ஃப்ரீடம்: நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து உள்ள படம் ஃப்ரீடம். இந்தப் படத்தை இயக்குநர் சத்யா சிவா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமார் உடன் இணைந்து நடிகர்கள், லிஜோமோல் ஜோஸ், போஸ் வெங்கட் மற்றும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.




மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் படத்தை பாண்டியன் பரசுராம் மற்றும் சுஜாதா பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் வருகின்ற ஜூலை மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஃப்ரீடம் படத்தின் டீசர்:
தலைவன் தலைவி: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் யோகிபாபு மற்றும் தீபா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தலைவன் தலைவி படத்தின் டைட்டில் டீசர்:
3BHK: நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் 3BHK. இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து நடிகர்கள் சரத் குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத் சைத்ரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.