இளைஞர்களில் ஏற்படும் திடீர் மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, டெல்லி எய்ம்ஸ் நடத்திய ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வருட காலமாக நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வு அடிப்படையிலான இந்த ஆராய்ச்சியில், 18 முதல் 45 வயது வரையிலான இளைஞர்களின் திடீர் மரணங்களை ஆய்வு செய்தபோது, கொரோனா தடுப்பூசி காரணமாக மரணம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.