இந்திய இசை உலகின் மகத்தான குரல்களில் ஒருவரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் பயோபிக்கில், நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளாரா என்ற கேள்வி தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞராக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாற்றில் இடம்பிடித்தார்.