2025-ம் ஆண்டில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படங்கள்… வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!

GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் கிவி பிரைஅகாஷ் குமார். இவரது இசையில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 5 படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார்.

2025-ம் ஆண்டில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படங்கள்... வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!

ஜிவி பிரகாஷ்

Published: 

23 Dec 2025 23:18 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் இதுவரை வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 90ஸ் கிட்ஸ்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை எப்படி ஒரு நாஸ்டாலஜிக் ஃபீல் கொடுக்கின்றதோ அதே போல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நாஸ்டாலஜி ஃபீல் கொடுக்கின்றது. தொடர்ந்து இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் அவ்வபோது நாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். இவரது இசையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி, சூர்யா நடிப்பில் சூர்யா 46, தனுஷின் டி 54 படம் துல்கர் சல்மானின் 41-வது படம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருகிறார். தனது இசையமைக்கும் பணியில் பிசியாக இருக்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முன்னதாக தனது இசையில் இந்த ஆண்டில் வெளியான படங்கள் குறித்து எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த 2025-ம் ஆண்டு மிகச் சிறப்பானதாக இருந்தது:

இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் இதுவரை நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், குட் பேட் அக்லி, வீர தீர சூரன், இட்லி கடை, மாஸ்க் என தொடர்ந்து 5 அருமையான படங்களுக்கு இசையமைத்துள்ளது மிகவும் நிறைவாக உள்ளது என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 2025-ம் ஆண்டில் தமிழ் ரசிகர்களிடையே அதிக கவனம் ஈர்த்த நாயகிகள் யார் யார்? லிஸ்ட் இதோ

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Year Ender: 2025ல் ஓடிடியில் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள்.. முதலிடத்தில் இருப்பது எந்த படம் தெரியுமா?

கடத்தியவரின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தப்பித்த இளைஞர் - என்ன நடந்தது?
விமான நிலையங்களில் கைவிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் இளைஞர்
11 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுக்கும் வாடகையாளர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..