ஸ்கூல் கட்டடித்துவிட்டு நான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் – ஃபகத் பாசில் ஓபன் டாக்

Fahadh Faasil: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஃபகத் பாசில் தற்போது தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பால் கலக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் ஃபகத் பாசில் தான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் குறித்து பேசியுள்ளார்.

ஸ்கூல் கட்டடித்துவிட்டு நான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் - ஃபகத் பாசில் ஓபன் டாக்

ஃபகத் பாசில்

Published: 

24 Jul 2025 12:43 PM

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் பாசில். மலையாள சினிமாவில் ஹிட் அடித்தப் பல படங்களை தமிழில் ரீமேக் செய்து ஹிட் கொடுத்துள்ளார் இவர். இந்த ஹிட் இயக்குநர் பாசிலின் மகன் தான் நடிகர் ஃபகத் பாசில். (Actor Fahadh Faasil) இவர் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனபோது இவரது தோற்றத்தை பலரும் கேலி கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வெளி நாட்டிற்கு சென்று நடிப்புத் துறையில் பயின்று பிறகு மீண்டும் நடிக்க வந்தார் நடிகர் ஃபகத் பாசில். நடிகராக ஃபகத் பாசில் அறிமுகம் ஆனபோது கிண்டலடித்த பலர் தற்போது மலையாள சினிமாவின் அடையாளமாக நடிகர் ஃபகத் பாசில் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு தனது நடிப்பால் அனைவரின் வாயையும் கட்டிப்போட்டார் ஃபகத் பாசில்.

தென்னிந்திய மொழிகளில் நடிகர் ஃபகத் பாசில் அதிக அளவில் படங்களில் நடித்தாலும் இவருக்கு என்று பான் இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பே தமிழில் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபகத் பாசில் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் எது தெரியுமா?

இந்த நிலையில் நடிகர் ஃபகத் பாசில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் முதன்முதலாக ஸ்கூல் கட்டடித்துவிட்டு தியேட்டருக்கு சென்று பார்த்த தமிழ் படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாகவது, ஊட்டில் 9 அல்லது 10-வது படித்துக்கொண்டிருந்த போது மாலையில் பள்ளியை கட்டடித்துவிட்டு நண்பர்களுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றோம்.

அப்போது நாங்கள் பார்த்த படம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த பாட்சா தான். முதன் முதலில் நான் ரஜினிகாந்தின் படத்தை அப்போதான் தியேட்டரில் பார்த்தேன். அந்தப் படத்தில் ரஜினிகாந்த் சொல்லும் ’உண்மைய சொன்னேன்’ வசனம் எல்லாம் புள்ளரித்துவிட்டது என்றும் அந்தப் பேட்டியில் நடிகர் ஃபகத் பாசில் பேசியிருந்தார்.

Also Read… ரஜினிகாந்த் தவிற வேறு எந்த தமிழ் நடிகரை பிடிக்கு… செய்தியாளரின் கேள்விக்கு தனுஷின் நச் பதில்!

இணையத்தில் கவனம் பெறும் ஃபகத் பாசிலின் வீடியோ:

Also Read… ஸ்டைலிஷான லுக்கில் நடிகர் சூர்யா… புதிய போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 டீம்!