அப்போ மாரீசன் ஃபீல் குட் படம் இல்லையா? மிஸ் பண்ணாமல் பாருங்க!

Maareesan Movie: நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த இரண்டாவது படம் மாரீசன். இவர்களின் கூட்டணியில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அப்போ மாரீசன் ஃபீல் குட் படம் இல்லையா? மிஸ் பண்ணாமல் பாருங்க!

மாரீசன்

Published: 

27 Sep 2025 21:45 PM

 IST

இயக்குநர் சுதீஸ் சங்கர் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாரீசன். இந்தப் படத்தின் கதையை கிருஷ்ணமூர்த்தி எழுதி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஃபகத் பாசில் (Actor Fahadh Faasil) மற்றும் வடிவேலு இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, ஐந்து நட்சத்திர கிருஷ்ணா, மதுமிதா, ஹரிதா முத்தரசன்,  ராஜா, ஸ்ரீநிவாஸ், ராம் கலைதரன், அகத்தியன், சிவபாலன், வைஷாக் பவணன், சிவகணேசன், ஜெய் கிருஷ்ணா, ஷர்மிளா, குரு லக்ஷ்மணன் என பலரும் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாரீசன் படத்தின் கதை என்ன?

மாரீசன் படத்தின் ட்ரெய்லர் வெளியான போது இது ஒரு ஃபீல் குட் படம் என்பது போலதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் படம் வெளியான பிறகுதான் தெரிந்தது அது ஃபீல்குட் படம் இல்லை த்ரில்லர் படம் என்று. அதன்படி படம் தொடங்கியபோது பாலையம் கோட்டை ஜெயிலில் இருந்து திருட்டு வழக்கில் இருந்து வெளியே வருகிறார்.

வெளியே வந்த அன்றே ஒரு வீட்டில் திருடுவதற்காக செல்கிறார். அங்கு சங்கிலியால் கட்டப்பட்ட இருந்த வடிவேலுவை காப்பாற்றுகிறார். அவருக்கு நியாபக மறதி இருப்பதை அறிந்துகொண்ட ஃபகத் பாசில் அவரிட இருந்து காசை திருடுவதற்காக அவருடனே பயணிக்கிறார். திருவண்ணாமலை வரை செல்ல பயணிக்கும் அவர்களின் பயணத்தில் பல திருப்பங்கள் ஏற்படுகின்றது.

அதன்படி அவர்கள் செல்லும் இடங்களில் தொடர்ந்து கொலை நடைபெறுகிறது. அதனை விசாரித்துக்கொண்டே போலீசும் செல்கிறது. அப்போது என்ன நடந்தது யார் அந்த கொலையை செய்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… கவினின் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

மாரீசன் படத்தின் ட்ரெய்லர் இதோ:

Also Read… நடிகர் தினேஷின் பர்த்டே ஸ்பெஷல் – வேட்டுவம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பா ரஞ்சித்