ஆடியன்ஸ்கு நிஜமாவே பிடிக்கும்… காந்தா படம் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு!

Dulquer Salmaan: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் காந்தா. இந்தப் படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

ஆடியன்ஸ்கு நிஜமாவே பிடிக்கும்... காந்தா படம் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு!

காந்தா படம்

Published: 

31 Jul 2025 12:19 PM

நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan) நடிப்பில் அடுத்ததாக் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் காந்தா (Kaantha Movie). இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியான போதே இது ஒரு பீரியட் படமாக இருக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான போது ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 29-தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த காந்தா படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த டீசரைப் பார்க்கும் போது பிரபல நடிகராக இருக்கும் நடிகர் துல்கர் சல்மானுக்கும் பிரபல இயக்குநராக இருக்கும் நடிகர் சமுத்ரகனிக்கும் இடையே இருக்கும் ஈகோ மோதலே இந்தப் படத்தின் கதை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில் ஸ்பிரிட் மீடியா, வேஃபேரர் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இந்தப் படத்தை ராணா டக்குபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக நடித்துள்ளார்.

காந்தா படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார் – ஏ.ஆர்.முருகதாஸ்

அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்த காந்தா படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படமும் நிச்சயமாக ரசிகரக்ளுக்கு பிடிக்கும் என்று தனது பதிவில் தெரிவித்து இருந்தார்.

மேலும், நம்து நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் அன்பு மற்றும் பாசிட்டிவான ஆதரவுக்கு நன்றி. செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் காந்தா படத்தின் மாயாஜாலத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் நடிகர் துல்கர் சல்மான் அந்த எக்ஸ் தள பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!