இந்தி சினிமாவில் வெளியான ஜாரா ஹாட்கே ஜாரா பாச்கே படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Zara Hatke Zara Bachke Movie OTT Update: இந்தி சினிமாவில் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் ஜாரா ஹாட்கே ஜாரா பாச்கே. இந்தப் படத்தை தற்போது எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தி சினிமாவில் வெளியான ஜாரா ஹாட்கே ஜாரா பாச்கே படத்தை மிஸ் செய்யாதீர்கள்

ஜரா ஹட்கே ஜரா பச்கே

Published: 

09 Dec 2025 22:01 PM

 IST

இந்தி சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான கேங்ஸ் ஆஃப் வாசியப்பூர் படத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு உதவி இயக்குநராக பணியாற்றியதன் சினிமாவில் காலடி வைத்தார் நடிகர் விக்கி கௌஷல். இவர் அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் லவ் ஷுவ் தே சிக்கன் குரானா என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் விக்கி கௌஷன் அதனைத் தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் நாயகனாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான மசான் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ், மன்மஸ்ரியான், சர்தார் உத்தம், கோவிந்தா நாம் மேரா என பல ஹிட் படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகர் விக்கி கௌஷல் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான ஜரா ஹட்கே ஜரா பச்கே என்ற படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் லக்ஷ்மன் உடேகர் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடிகை சாரா அலிகான் நடித்து இருந்தார். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் இப்படிதான் இருக்கும்… வைரலாகும் தகவல்

ஜரா ஹட்கே ஜரா பச்கே படத்தின் கதை என்ன:

மிடில் க்ளாஸ் ஃபேமிலியில் வசிக்கும் விக்கி கௌஷல் மற்றும் சாரா அலிகான் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டிருப்பனர். இவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை இருந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் இருப்பதால் தனியாக இவர்களுக்கு என்று ஒரு அறை கூட இருக்காது. இந்த நிலையில் தங்களுக்கு என்று ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் என்று சாரா அலிகான் ஆசைப்படுகிறார். ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து பார்த்து செலவு செய்யும் விக்கி கௌஷல் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பிக்பாஸில் மீண்டும் மோதிக்கொள்ளும் ஆதிரை மற்றும் கானா வினோத் – வைரலாகும் வீடியோ

குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..