Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொல்லாதவன் மாதிரி ஆடுகளம் இல்லை என விமர்சனம் செய்தனர் – வெற்றிமாறன்

Director Vetrimaaran talks about Aadukalam Movie: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் வெற்றிமாறன். இவர் தற்போது அரசன் படத்தின் படப்பிடிப்பு பணியில் பிசியாக உள்ள நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொல்லாதவன் மாதிரி ஆடுகளம் இல்லை என விமர்சனம் செய்தனர் – வெற்றிமாறன்
தனுஷ் மற்றும் வெற்றிமாறன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Dec 2025 20:35 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் வெற்றிமாறன். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்ப் எற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஆடுகளம். சேவல் சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் டாப்ஸி,
கிஷோர், வி.ஐ.எஸ்.ஜெயபாலன், நரேன், முருகதாஸ், மீனாள், சென்ட்ராயன், பெரிய கருப்பு தேவர், ஜெயபிரகாஷ், தினேஷ் ரவி, ஹல்வா வாசு, மூணார் ரமேஷ், வேல்ராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் குறித்து சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பொல்லாதவன் மாதிரி ஆடுகளம் இல்லை என விமர்சனம் செய்தனர்:

‘ஆடுகளம்’ வெளியானபோது, ​​அது ‘பொல்லாதவன்’ அளவுக்குச் சிறப்பாக இல்லை என்று பலர் கூறினார்கள். அது தங்களுக்குப் பிடித்தமான படம் அல்ல என்று சிலர் சொன்னார்கள், இப்போதும் கூட பலர் அதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

அந்தப் படத்தில் அரசியல் ரீதியாகச் சரியானதல்லாத பல கூறுகள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒருவேளை அது அந்த காலகட்டத்தில் பொருத்தமாக இருந்திருக்கலாம், ஆனால் இன்றும் கூட அதில் அரசியல் ரீதியாகச் சரியானதல்லாத பல அம்சங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன்.

“வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா” என்ற பாடல் வரியைத் தவிர்த்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அந்த நேரத்தில் அது அவசியமாகத் தோன்றியது, ஆனால் இப்போது அதைப் பயன்படுத்தியதற்கு வருந்துகிறேன் என்றும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Also Read… மலையாள சினிமாவில் கெத்து காட்டும் நிவின் பாலி… சர்வம் மாயா படத்தின் வசூல் இவ்வளவா? வைரலாகும் அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள மிடில் கிளாஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ