தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போகிறேன் – வெற்றிமாறனின் அதிரடி முடிவு

Director Vetrimaaran: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து தான் தயாரிக்கும் படங்கள் பிரச்னைகளில் சிக்குவதால் ஒரு மிகப்பெரிய முடிவு ஒன்றை வெற்றிமாறன் எடுத்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போகிறேன் - வெற்றிமாறனின் அதிரடி முடிவு

வெற்றிமாறன்

Published: 

01 Sep 2025 16:00 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பொல்லாதவன். நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran) இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் வெற்றி மாறன். பொல்லாதவன் படத்தில் பெற்றோர்களின் சிரமம் தெரியாமல் வாழும் இளைஞன் காதல் ஏற்பட்ட பிறகு வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற முயற்சிக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத சூழ்நிலையில் அவர் ஒரு ரவுடி கும்மலிடம் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அதில் இருந்து அந்த இளைஞர் எப்படி வெளியே வந்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலப் படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை பாகம் ஒன்று மற்றும் விடுதலை பாகம் இரண்டு ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி தயாரிபபாளர்காவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.

தனது தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடும் வெற்றிமாறன்:

அதன்படி க்ராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினார் வெற்றிமாறன். இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக இவர் உதயம் என்எச் 4, பொரியாளன், காக்கா முட்டை, விசாரணை, கொடி, அண்ணனுக்கு ஜெய், வட சென்னை தொடங்கி தற்போது வெளியாக காத்திருக்கும் பேட் கேர்ள் வரைப் பலப் படங்களை தயாரித்துள்ளார்.

இதில் இறுதியாக இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான பேட் கேர்ள் படத்திற்கக சென்சார் போர்டுடன் போராடும் நிலமை வெற்றிமாறனுக்கு ஏற்பட்டது. படங்களை தயாரிப்பது மிகவும் கடினமான ஒன்று என்று தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறன் படங்களை இயக்குவதில் இருக்கும் சுதந்திரம் இதில் இல்லை என்று கூறி தனது தயாரிப்பு நிறுவனத்தை மூட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… உங்களுக்கு நான் ஈ படம் பிடிக்குமா? அப்போ இந்த லவ்லி படத்தை மிஸ் செய்யாதீர்கள்

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு:

Also Read… அந்த மாதிரி கதை வந்தா தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்!