டீசரைப் பார்த்து மொத்த படத்தையும் முடிவு செய்யாதீர்கள் – TN 2026 படக் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் உமாபதி ராமையா

Director Umapathy S Ramaiah Speech Viral On Social Media : தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநராக வலம் வருபவர் உமாபதி ராமையா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் TN 2026.

டீசரைப் பார்த்து மொத்த படத்தையும் முடிவு செய்யாதீர்கள் - TN 2026 படக் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் உமாபதி ராமையா

உமாபதி ராமையா

Published: 

04 Apr 2026 12:31 PM

 IST

தமிழ் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகம் ஆவது மட்டும் இன்றி காமெடி மற்றும் சின்ன சின்ன வேடங்களில் நடித்த நடிகர்களின் வாரிசுகளும் தொடர்ந்து திரையரங்குகளில் அறிமுகம் ஆகி வருகின்றனர். அதன்படி தம்பி ராமையாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் உமாபதி ராமையா. தொடர்ந்துதமிழ் சினிமாவில் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநராகவும் உமாபதி ராமையா அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இவரது இயக்கத்தில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் சினிமா மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனதைவிட சின்னத்திரையில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக எந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் உமாபதி ராமையா படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் தற்போது உமாபதி ராமையா இயக்கி உள்ள படம் TN 2026. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி தமிழக மக்களிடையே வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படம் குறித்து உமாபதி ராமையா பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

TN 2026 படக் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் உமாபதி ராமையா:

இப்படத்தில் நட்டி சார் பல விதமான தோற்றங்களில் வருகிறார். டீசரில் நாங்கள் சில விஷயங்களை மட்டுமே வெளியிட்டிருந்தாலும், அதனடிப்படையிலேயே பலவிதமான யூகங்கள் இப்போதே பரவி வருகின்றன. படத்தில் நாங்கள் இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறோம்.

இது யாரையும் குறிவைத்து எடுக்கப்பட்ட அரசியல் திரைப்படம் அல்ல. இது யாருக்கும் எதிரானதாகவும் இருக்காது. இதை ஒரு திரைப்படமாக மட்டுமே பாருங்கள். நான் யாரையும் அவமதித்துப் பேசவில்லை. விஜய் ஒரு சிங்கம். அவரை அவமதிப்பது பற்றி நான் எப்படி நினைத்துக்கூடப் பார்க்க முடியும்? என்று தெரிவித்து இருந்தார். இது வைரலாகி வருகின்றது.

Also Read… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ர்லீஸ் ஈவென்ட் எப்போது?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மிடில் கிளாஸில் இருந்து பணக்காரனாக நினைக்கும் கார் ஓட்டுனர்… எப்படி இருக்கு கார்மேனி செல்வம் படம் – விமர்சனம் இதோ!

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.