கபாலி படத்தில் ரஜினிகாந்தை எப்படி அந்த வசனம் பேச வைக்கலாம்னு விமர்சனம் சொன்னாங்க – பா.ரஞ்சித்

Director Pa Ranjith: இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கபாலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பா ரஞ்சித் தற்போது பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கபாலி படத்தில் ரஜினிகாந்தை எப்படி அந்த வசனம் பேச வைக்கலாம்னு விமர்சனம் சொன்னாங்க - பா.ரஞ்சித்

ரஜினிகாந்த், பா ரஞ்சித் மற்றும் தாணு

Published: 

26 Oct 2025 12:19 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் (Venkat Prabhu) உதவி இயக்குநராக பணியாற்றி அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் பா ரஞ்சித். பா ரஞ்சித் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் நடிகர் ரஜிகாந்த் நடிப்பில் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் கபாலி. இந்தப் படம் கடந்த 22-ம் தேதி ஜூலை மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் வின்ஸ்டன் சாவோ, ராதிகா ஆப்தே, தன்சிகா, கிஷோர், தினேஷ், கலையரசன், ஜான் விஜய், ரோஸ்யம் நோர், நாசர், தமிழர்கள், ரித்விகா, சங்கிலி முருகன், சார்லஸ் வினோத், மைம் கோபி, ஆர்.அமரேந்திரன், லிஜீஷ், வனேசா குரூஸ், விஸ்வந்த், ஹரி கிருஷ்ணன், கஜராஜ், சம்பத் ராம், ராமா, உதய் மகேஷ், கேப்ரியல்லா செல்லஸ்,
நந்தகுமார், ரமேஷ் திலக், சௌந்தர்யா பாலா நந்தகுமார், டார்க்கி நாகராஜா, நார்மன் ஹக்கீம், யாங்க் காசிம், சாக் தைபன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

கபாலி படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பா ரஞ்சித் விளக்கம்:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் படத்தின் வெற்றி விழாவில் பேசியபோது கபாலி படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் படம் ரிலீஸிற்கு முன்பே 100 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் படம் வெளியான போது இந்த மாதிரியான வசனங்களை எப்படி ரஜினியை பேச வைக்கலாம் என்று விமர்சனம் எழுந்தது.

படத்தின் திரைக்கதையில் பிரச்னை இருந்ததை நான் உணர்ந்தது கொண்டேன். ஆனால் வசனம் எப்படி பேச வைக்கலாம் என்று கேட்டது எனக்கு புரியவில்லை. மேலும் இந்தப் படத்தில் என் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகதான் ரஜினிகாந்த் எனக்கு காலா படத்தில் வாய்ப்பு கொடுத்தார் என்று பா ரஞ்சித் பேசியுள்ளார்.

Also Read… புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்

இணையத்தில் வைரலாகும் பா ரஞ்சித்தின் பேச்சு:

Also Read… வெத நான் போட்டது… 33 ஆண்டுகளை நிறைவு செய்தது தேவர் மகன் படம்