கர்ணன் படத்துல அந்த ஒரு ஷாட்தான் நாம் ரொம்ப எஞ்சாய் பண்ணேன் – இயக்குநர் மாரி செல்வராஜ்!

Director Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது பைசன் காளமாடன். இந்த நிலையில் மாரி செல்வராஜ் முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கர்ணன் படத்துல அந்த ஒரு ஷாட்தான் நாம் ரொம்ப எஞ்சாய் பண்ணேன் - இயக்குநர் மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ்

Published: 

18 Oct 2025 21:24 PM

 IST

தமிழ் சினிமாவில் மொத்தமாகவே 5 படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன மாரி செல்வராஜ் தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இதில் பைசன் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ள நிலையில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்த ஒரு ஷாட் கர்ணன் படத்தில் இருப்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவதாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கர்ணன். கடந்த 9-ம் தேதி ஏப்ரல் மாதம் 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ரஜிஷா விஜயன்,
லால், யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், ஜெகன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, நட்டி சுப்ரமணியம், ஜி.எம்.குமார், டெல்லி கணேஷ், சண்முகராஜன், சிங்கம்புலி, ‘பூ’ ராம், ஜானகி, அழகம் பெருமாள், மதன் குமார் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஷாட்:

இந்த நிலையில் முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் அளித்தப் பேட்டி ஒன்றில் கர்ணன் படத்தில் ஒரு காட்சி தான் தனக்கு மிகவும் பிடித்தது என்று தெரிவித்து இருந்தார். அந்த காட்சி எடுத்து முடித்ததும் மிகவும் கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

அது என்ன என்றால் கர்ணன் படத்தில் மலையின் கீழே இருக்கும் கழுதை ஒன்று மலையில் மேல் சென்று நிற்க வேண்டும். அந்த காட்சி யாராலும் எடுக்க முடியாது என்று சொன்னபோது அந்த காட்சி அதுவாக அமைந்ததும் தனக்கு அது எவ்வளவு மகிழ்ச்சியான விசயம் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Also Read… ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான அழகான கதை – கும்கி 2 படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

இணையத்தில் வைரலாகும் மாரி செல்வராஜின் பேட்டி:

Also Read… தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது கருப்பு படத்தின் முதல் சிங்கிள் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ