அஸ்வத் – சிம்பு படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
Director Ashwath Marimuthi: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இவர் இயக்கத்தில் உருவாக உள்ள படம் குறித்த தகவலை பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஸ்வத்
தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஓ மை கடவுளே. இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ஃபேண்டசி காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப்பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ட்ராகன். நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ட்ராகன். இந்தப் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் தொடர்ந்து வசூலில் ரூபாய் 100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு அதிகம் வசூலித்த படமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரித்து பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அஸ்வத் – சிம்பு படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
அந்தப் பேட்டியில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடம் அவரது அடுத்தப் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அவர் பேசிய போது, நீங்கள் எப்போது கேட்டாலும் பதில் ஒன்றுதான், சிம்பு, சிம்புதான். திரைக்கதை வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர் தற்போது வெற்றி சாரின் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார், அந்தப் படம் முடியும் தருவாயில், நாங்கள் எங்கள் படத்தின் படப்பிடிப்பை இணையாகத் தொடங்குவோம். அது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
“Whenever you ask the answer is Same Simbu,Simbu. Script work is on.He is currently working on vetri sir’s project now, towards that film’s end we will start shoot for our film parallelly. It will release next year🧨❤️🔥”
– @Dir_Ashwath on Recent Interview #STR51 @SilambarasanTR_ pic.twitter.com/lLF5n4Vbvj— SANJAY (@_sanjaykannan_) December 31, 2025
Also Read… பொல்லாதவன் மாதிரி ஆடுகளம் இல்லை என விமர்சனம் செய்தனர் – வெற்றிமாறன்