Dhanush: Faces Of Kara.. தனுஷின் கர படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக புரோமோ வெளியீடு!

Faces Of Kara Video: நடிகர் தனுஷின் 54வது திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் கர. இந்த படத்தில் தனுஷுடன் பல்வேறு திரைப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி வரவேற்கப்பட்ட நிலையில், தற்போது மொத்த கதாபாத்திரங்கள் குறித்த புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Dhanush: Faces Of Kara.. தனுஷின் கர படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக புரோமோ வெளியீடு!

கர பட கதாபாத்திரங்கள் அறிமுக புரோமோ

Updated On: 

27 Mar 2026 17:34 PM

 IST

தமிழ் சினிமாவில் போர் தொழில் (Por Thozhil) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர்தான் விக்னேஷ் ராஜா (Vignesh Raja). இவரின் இயக்கத்தில் வெளியான முதல் படமே சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில், தனது இரண்டவது படத்தில் தனுஷுடன் (Dhanush) இணைந்திருந்தார். இப்படமானது ஆரம்பத்தில் டி54 (D54) என அழைக்கப்பட்டுவந்த நிலையில், பின் “கர” (Kara) என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தனுஷ் லீட் மற்றும் ஆக்ஷன் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 17 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற திரைப்படங்களை ஒப்பிடும்போது, தனுஷின் கர படத்தில் மமிதா பைஜூவின் கதாபாத்திரமானது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த விதத்தில் சில நாட்களாக இப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டுவருகிறது. அந்த விதத்தில், இன்று 2026 மார்ச் 27ம் தேதியில், இப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த புரோமோவாக படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.. ராணாயணம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

கர திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ குறித்த பதிவு:

இந்த கர படத்தில் நடிகர் தனுஷ் “கரசாமி” என்ற வேடத்தில், மமிதா பைஜூ “செல்லி” என்ற வேடத்தில், கே.எஸ்.ரவிக்குமார் “கந்தன்” என்ற வேடத்தில், சுராஜ் வெஞ்சாரமூடு ப”ரதனாகவும்”, கருணாஸ் “காசி மாயனாகவும்”, ஜெயராம் “முத்து செல்வம்” மற்றும் நடிகர் ப்ரித்வி பாண்டிராஜ் “முருகேசன்” போன்ற வேடத்திலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் இவர்கள் அனைவரும் மிகவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இந்த திரைப்படத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: தனுஷின் கர படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்

இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிவரும் நிலையில், இதன் 2வது பாடல் ரிலீஸ் எப்போது என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து திருவிழா போன்று இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பு வந்திருக்கிறது என கூறலாம்

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..