தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சிம்பு – தனுஷ்… வைரலாகும் பதிவு
Dhanush and Silambarasan congratulations to Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி அடைந்துள்ள தளபதி விஜய் அவர்களுக்கு நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் தனுஷ் இருவரும் தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.

சிலம்பரசன், விஜய், தனுஷ்
2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 24-ம் தேதி ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைப்பெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று மே மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு காலை 8 மணி முதல் தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இதில் காலை முதலே நடிகர் தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் முன்னனி வகித்து வந்தனர். அதில் பெரும்பான்மையாக தமிழக வெற்றிக் கழகத்தினர் வென்றுள்ளனர். மேலும் எதிர்க்கட்சியாக கடந்த முறை ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகம் உள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் விஜய் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனித் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக தற்போது நடிகர்கள் சிலமபரசன் மற்றும் தனுஷ் இருவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.
தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சிம்பு:
நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, வரலாறு தானாகவே நிகழ்ந்துவிடவில்லை. அது தனக்கான தருணத்தைத் தானே தேர்ந்தெடுத்தது. உன்னைக் குறித்துப் பெருமை கொள்கிறேன், விஜய் அண்ணா. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
History didn’t just happen…
it chose its moment.
Proud of you @TVKVijayHQ Anna ❤️“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!”
— Silambarasan TR (@SilambarasanTR_) May 4, 2026
Also Read… Sundar C: தலைவர் 173 படத்திற்காக நான் எழுதிய கதை இப்படிதான் இருந்தது – சுந்தர் சி பேச்சு!
தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன தனுஷ்:
நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
— Dhanush (@dhanushkraja) May 4, 2026