சியான் 63 படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் போடி கே. ராஜ்குமார்!

Chiyaan 63: நடிகர் விக்ரம் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சியான் விக்ரமின் 63-வது படத்தை யார் இயக்க உள்ளது என்று தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சியான் 63 படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் போடி கே. ராஜ்குமார்!

சியான் 63

Published: 

30 Oct 2025 18:41 PM

 IST

தமிழ் சினிமாவில் வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்டாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். தனது கடின உழைப்பின் காரணமாக தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா சினிமா முழுவதும் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 1990-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன நடிகர் விக்ரம் தற்போது 35 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருகிறார். படத்திற்காக நடிகர் விக்ரம் தனது உடல் எடையை கூட்டுவது குறைப்பது என கடின உழைப்பை செய்து வருகிறார். ஒரு படத்திற்காக நடிகர் இவ்வளவு மெனக்கெடல் எடுப்பது நடிகர் சியான் விக்ரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன். இயக்குநர் அருண் குமார் எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரமின் நடிப்பும் ஆக்‌ஷன் காட்சிகளையும் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் படத்திற்கு பிறகு அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சியான் 63 படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர்:

அதன்படி நடிகர் விக்ரமின் 63-வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் சார்பாக தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் போடி கே. ராஜ்குமார் இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுக ஆகி உள்ளார். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஒரே நேரத்தில் விஜய் – அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்… வைரலாகும் தகவல்

சியான் 63 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!