Coolie Movie: தமிழ் நாட்டில் கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது? மாஸான அப்டேட் கொடுத்த படக்குழு!

Coolie Movie Ticket Booking : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு வெளிநாடுகளில் முன்பே தொடங்கிய நிலையில் தமிழகத்தில் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Coolie Movie: தமிழ் நாட்டில் கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது? மாஸான அப்டேட் கொடுத்த படக்குழு!

கூலி

Published: 

08 Aug 2025 19:19 PM

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர் கான், உபேந்திரா ராவ், சௌபின் ஷாகிர், நாகர்ஜுனா, ரெபா மோனிகா ஜான், ரசிதா ராம், ஜூனியர் எம்ஜிஆர், கண்ணா ரவி, காளி வெங்கட், மோனிஷா பிளெஸ்ஸி மற்றும் சார்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கூலி படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதன்படி ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த கூலி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் படத்தை தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் கீழ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்று 8 மணிக்கு கூலி டிக்கெட் புக்கிங் தொடங்குகிறது:

இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கி வசூலில் மாஸ் காட்டி வருகின்றது. மேலும் இன்று காலை கேரள மாநிலத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தமிழகத்தில் எப்போது டிக்கெட் புக்கிங் ஓபனாகிறது என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று 08-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு மாலை 8 மணிக்கு தமிழகத்தில் டிக்கெட் புக்கிங் ஓபனாகிறது என்று தெரிவித்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… நடிகையாவதற்கு முன்பு அந்த நடிகரோட நடிக்க அவ்வளவு ஆசைப்பட்டேன் – ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மகன் சஞ்சய் குறித்து சுவாரஸ்யமாக பேசிய விஜய்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?