இதுக்கு இல்லையாங்க ஒரு என்ட்… பிக்பாஸில் தொடரும் சண்டை
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இதுவரை எந்த சீசனுக்கும் இல்லாத அளவிற்கு வொர்ஸ்ட் சீசன் என்று பிக்பாஸே கூறும் அளவிற்கு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 9-வது சீசன் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது டாஸ்குகளும் விளையாட்டும் மாற்றப்பட்டு வருகின்றது. அதன்படி ஒவ்வொரு சீசன் தொடங்கும் போதும் இந்த சீசனில் என்ன வித்யாசம் இருக்கிறது என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய போதும் ரசிகர்கள் அப்படிதான் இந்த சீசனையும் எதிர்பார்ப்த்து காத்திருந்தனர். இதற்கு முன்னதாக வெளியான சீசன்களிலும் தொடர்ந்து போட்டியாளர்களிடையே சண்டை என்பது நடந்துகொண்டு இருந்தது. ஆனால் அது போட்டியில் மட்டுமே இருக்கும். மற்ற நேரங்களில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அது பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த 8 சீசன்களில் நடந்த நிகழ்வு ஆகும். ஆனால் இந்த 9-வது சீசன் தொடங்கி இன்றுடன் 60 நாட்களை எட்டியுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் தொடர்ந்து மக்களுக்கு டாக்ஸிக்காகவே தெரிகின்றனர். மேலும் போட்டியாளர்கள் போட்டியிலும் சண்டைபோட்டுக்கொள்கிற்னார். போட்டி இல்லாமல் இருக்கும் நேரத்திலும் வன்மத்தைக் கொட்டிக்கொள்கின்றனர். இது பார்வையாளர்களுக்கு மிகவும் எரிச்சலை மூட்டும் விதமாக உள்ளது.




தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளும் பிக்பாஸ் போட்டியாளர்கள்:
இந்த நிலையில் இன்று 60-வது நாளிற்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வீடியோவில் வினோத் மற்றும் திவ்யா இடையே சண்டை ஏற்படுகிறது. இதில் எறிகிர நெறுப்பில் எண்ணையை ஊற்றுவது போல பார்வதியும் திவ்யாவிடம் சண்டையில் ஈடுபடுகிறார். இதன் காரணமாக பிக்பாஸ் வீடே கூச்சழும் குழப்புமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Also Read… பூஜையுடன் தொடங்கியது ரியோவின் ராம் in லீலா படம்… வைரலாகும் போஸ்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day60 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/9fK5ukj9XJ
— Vijay Television (@vijaytelevision) December 4, 2025