AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Cinema Rewind: கமலுக்கு தமிழில் டப்பிங் பேசிய சித்ரா லட்சுமணன்.. என்ன படம் தெரியுமா?

Tik Tik Tik Movie : கமல்ஹாசனின் மிக முக்கியமான படத்தின் ஷூட்டிங் முடிந்த பின், டப்பிங் பேசிய அவரின் வாய்ஸ் கிளிப்பிங் காணாமல் போனதால், சித்ரா லட்சுமணன் அவருக்கு டப்பிங் பேசியுள்ளார். இதனை மறைந்த நடிகர் மனோபாலாவிடம் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது பலருக்கும் தெரியாத தகவலாகும்.

Cinema Rewind: கமலுக்கு தமிழில் டப்பிங் பேசிய சித்ரா லட்சுமணன்.. என்ன படம் தெரியுமா?
சித்ரா லட்சுமணன் - கமல்ஹாசன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Jun 2025 07:45 AM IST

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசனுக்கு (Kamal Haasan) பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு படத்தில் டப்பிங் பேசியுள்ளது பலரும் அறியாத தகவலாகும். பொதுவாக தன்னுடைய படங்களில் மற்றவர்கள் யாரும் டப்பிங் பேசுவதை கமல் விரும்ப மாட்டார். இப்படியான நிலையில் சித்ரா லட்சுமணன் எப்படி பேசியிருப்பார் என்பது பற்றி காணலாம். அதாவது மறைந்த நடிகர் மனோபாலா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “கமல் நடித்த டிக் டிக் (Tik Tik Tik) என்ற படத்தில் ஷூட்டிங் நிறைவடைந்து டப்பிங் எல்லாம் முடிந்துவிட்டது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் இந்தியில் சனம் தெரி கசம் என்ற படத்தின் சூட்டிங்கிற்காக மும்பைக்கு சென்று விட்டார்.

என்னுடன் இருந்த உதவி இயக்குனர்கள் குழுவினர் கமல் பேசிய வாய்ஸ் கிளிப்பிங்கை தொலைத்து விட்டனர். இப்போது அந்த மாதிரி நடந்து விட்டால் whatsapp செயலி மூலம் ரெக்கார்ட் செய்து அனுப்பி விடுகிறார்கள். அப்போது அதெல்லாம் இல்லை.

சரியான நேரத்தில் தோன்றிய யோசனை

என்ன செய்யலாம் என திணறிக் கொண்டிருந்தபோது சித்ரா லட்சுமணன் அங்கு வந்தார். ஏன் இவரை வைத்து கமல் குரலை நாம் பதிவு செய்யக்கூடாது என திடீரென தோன்றியது. ஆனால் சித்ரா லட்சுமணனுக்கு பயமாகிவிட்டது. கமலுக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொலை செய்து விடுவார் எனக் கூற அதெல்லாம் ஒன்றும் நடக்காது நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினேன். இதனை அடுத்து சித்ரா லட்சுமணனின் கழுத்தை நான் நன்றாக அழுத்தி பிடித்துக் கொண்டு கமல் குரலை திரையில் அவரை வைத்து பேச வைத்தேன். ராதாவும் கமல்ஹாசனும் சந்திக்கும் ஒரு காட்சியில் ஒரு வரி வசனம் தான் அது என்றாலும் இன்றைக்கும் அது பலருக்கும் தெரியாது” என மனோபாலா தெரிவித்திருப்பார்.

சித்ரா லட்சுமணன்

டிக் டிக் டிக் படம் 

1981 ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவி, ராதா, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் டிக் டிக் டிக். இளையராஜா இசையமைத்த இந்த படம் ஹிந்தியில் 1984 ஆம் ஆண்டு கரிஸ்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் கமல் தான் ஹீரோவாக நடித்தார். கிரைம் திரில்லர் பாணியிலான இந்தப் படமானது அந்த ஆண்டு தீபாவளி தினத்திற்கு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இன்றைக்கு பரபரப்பை உண்டாகும் அளவுக்கு இப்படத்தின் கதை அமைந்திருக்கும். இந்த படத்தில் கமலின் முன்னாள் மனைவியான வாணி கணபதி மாதவியின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து கமல் மற்றொரு முன்னாள் மனைவியான சரிகா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us