திரையரங்குகளில் வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம்… FDFS பார்க்க வந்த பிரபலங்கள்!

Coolie Movie: இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் திரையரங்குகளுக்கு சென்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரையரங்குகளில் வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம்... FDFS பார்க்க வந்த பிரபலங்கள்!

ரஜினிகாந்த்

Published: 

14 Aug 2025 12:22 PM

இயக்குநர் லோகெஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 171-வது படமாக உருவாகியுள்ளது கூலி. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த 2023-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றது. அதன்படி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இன்று ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இந்த நிலையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பண்டிகை போல உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் திரையரங்குகளுக்கு வரிசைக்கட்டி சென்றுள்ளனர்.

மேலும் படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்குகளில் பார்த்துள்ளனார். அதேபோல நடிகை ஸ்ருதி ஹாசனும் முதல் நாள் முதல் காட்சியை குரேம்பேட்டையில் உள்ள திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்தின் கூலி படத்தைப் பார்க்க வந்த தனுஷ்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனும் நடிகருமான தனுஷ் தான் மிகப்பெரிய ரஜினிகாந்த் ரசிகர் என்பதை அனைத்து இடத்திலும் தொடர்ந்து பதிவு செய்துள்ளார். அதன்படி அவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதற்கு முன்பும், விவாகரத்திற்கு பிறகும் ரஜினிகாந்தின் ரசிகன் என்பதை பெருமையாகவே தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று கூலி படத்தைப் பார்க்க தனுஷ் திரையரங்கிற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஒன்றாம் வகுப்பில் இருந்து இப்போ வரைக்கும்… வைரலாகும் கார்த்திக் சுப்பராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு

கூலி படத்தை ரசிகர்களுடன் கண்டுகழித்த இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர்:

இன்று கூலி படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் திரையரங்குகளில் ரசிகர்களுடன் இணைந்து படத்தைப் பார்த்துள்ளனர்.

Also Read… Coolie Movie X Review: கோலாகலமாக வெளியான கூலி படம் – மக்களின் விமர்சனம் என்ன?