ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது பைசன் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்
Bison Kaalamaadan Movie: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பைசன் காலமாடன். திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைசன் காலமாடன்
தமிழ் சினிமாவில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் காலமாடன், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டியூட், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் டீசல் என மூன்று முக்கியப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த வரிசையில் பைசன் காலமாடன் மற்றும் டியூட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரையரங்குளில் ஹிட் அடித்த டியூட் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ட்யூட் படம் ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பைசன் காலமாடன் படம் குறித்த ஓடிடி அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ஸ்போர்ஸ்ட் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் பைசன் காளமாடன்:
அதன்படி மனத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த பைசன் காளமாடன் படம் உருவாகி இருந்தது. இதில் ஒரு கபடி வீரராக இந்தியாவிற்காக விளையாட எத்தனை துன்பங்களையும் தடைகளையும் தாண்டி வந்தார் என்பதை இந்தப் படம் மிகவும் அழுத்தமாக காட்டியிருந்தது.
இந்த உலகில் திறமை இருந்தாலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளால் எத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – நடிகர் அஜித் குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் சூரி
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kabaddi nammuluku vena oru game ah irukalam, aana Kittanukku adhaan life eh 🔥💪 pic.twitter.com/DeZoMlOG5l
— Netflix India South (@Netflix_INSouth) November 17, 2025
Also Read… AK 64 படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்