பைசன் படத்திலிருந்து வெளியானது தென்னாடு பாடல் வீடியோ

Thennaadu Video Song | தமிழ் சினிமாவில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தில் இருந்து தென்னாடு என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

பைசன் படத்திலிருந்து வெளியானது தென்னாடு பாடல் வீடியோ

பைசன்

Published: 

18 Nov 2025 15:03 PM

 IST

கோலிவுட் சினிமாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் இயக்குநர் மாரிசெல்வராஜ் (Director Mari Selvaraj) இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியானது பைசன் காளமாடன். இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் பசுபதி, லால், அனுபமா பரமேசுவரன், ரஜிஷா விஜயன், அமீர், அழகம் பெருமாள், பிரபஞ்சன், ஹரிதா முத்தரசன், அருவி மதன், அனுராக் அரோரா, சுபத்ரா ராபர்ட், புளியங்குளம் கண்ணன், லெனின் பாரதி மற்றும் விஸ்வதேவ் ரச்சகொண்டா ஆகியோர் உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்தைக் கடந்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகின்ற 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து பாடல்கள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது படத்தில் இருந்து புது பாடல் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பைசன் படத்திலிருந்து வெளியானது தென்னாடு பாடல் வீடியோ:

இந்த பைசன் காளமாடன் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற தென்னாடு பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸ் போட்டியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் இவர்கள்தான் – வைரலாகும் லிஸ்ட்

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 17 நாட்கள் நான்ஸ்டாப் படப்பிடிப்பு – மகுடம் படம் குறித்து விஷால் வெளியிட்ட சூப்பர் அப்டேட்

ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?
முட்டி அளவு நீர்.. தாய்லாந்து உணவகத்தில் குவியும் வாடிக்கையாளர்கள்..
இத்தாலியில் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு சிறப்பு சலுகைகள்..
‘சாட்ஜிபிடி கோ’ ஓராண்டுக்கு இலவசம்.. இந்தியர்களுக்கு பயனர்களுக்கு சலுகை!