பர்த்டே பேபி மாளவிகா மோகனனின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சங்கள் தெரியுமா?
Actress Malavika Mohanan: மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனுக்கு தற்போது எத்தனை லட்சம் ஃபாலோவர்கள் உள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மாளவிகா மோகனன்
மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை மாளவிகா மோகன் (Actress Malavika Mohanan). இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்தார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்து வந்த நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவரது நண்பராக வரும் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் இதில் நாயகியாக நடித்தப் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
இன்ஸ்டாகிராம் மாளவிகா மோகனனின் ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சங்கள்?
தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 43 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். மேலும் அவரது பதிவுகளுக்கு தொடர்ந்து அவர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் இன்று ஆகஸ்ட் மாதம் 04-ம் தேதி 2025-ம் ஆண்டு தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… எனது படங்களில் அந்தப் படத்தை 2-வது பாகம் எடுத்தால் மகிழ்ச்சி – நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகை மாளவிகா மோகனனின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு:
Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்