பிக்பாஸில் தரமான சம்பவம் செய்த விஜய் சேதுபதி… பாராட்டும் ரசிகர்கள்!

Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்களிடையே பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் நேற்று வீக் எண்ட் எபிசோடில் விஜய் சேதுபதியின் செயல் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகின்றது.

பிக்பாஸில் தரமான சம்பவம் செய்த விஜய் சேதுபதி... பாராட்டும் ரசிகர்கள்!

விஜய் சேதுபதி

Updated On: 

26 Oct 2025 11:07 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே வீட்டில் பிரச்சனையும் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. தமிழில் முன்னதாக ஒளிபரப்பான 8 சீசன்களை விடவும் இந்த 9-வது சீசன் தொடங்கியதில் இருந்து மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை அதிகமாக பெற்று வருகின்றது. இந்த அளவிற்கான நெகட்டிவ் விமர்சனங்கள் இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன்களில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த சீசனில் போட்டியாளர்களின் செயல்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்கவைக்கும் விதமாக இருந்து வருகின்றது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வீட்டில் குடும்பத்தினர் உடன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்க்கப்படும் ஒன்று என்பதை மறந்த போட்டியாளர்கள் அடல்ட் கண்டெண்டுகளை அதிகமா பேசி வருவது மக்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த மாதிரியான அடல்ட் கண்டெண்டுகள் மட்டும் இன்றி உள்ளே உள்ள போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அவர்களின் சமூகம் சார்ந்து பின்னணி குறித்து அத்துமீறி பேசுவது, ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வன்முறையை கையில் எடுப்பது என அனைத்தும் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த செயல்கள் அனைத்தும் பார்வையாளர்களிடையே தொடர்ந்து வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. மேலும் இது குறித்து வீக் எண்ட் எபிசோடில் விஜய் சேதுபதி பேச வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பிக்பாஸில் தரமான சம்பவம் செய்த விஜய் சேதுபதி:

கடந்த 8-வது சீசன் முதல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி ஒவ்வொரு வாரம் வரும் போது இந்த வாரம் போட்டியாளர்கள் செய்த தவறை வெளிப்படையாக பேசி சுட்டிக்காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் போது அவர் அதனை மேலோட்டமாக பேசிவிட்டு சென்றுவிடுவார். இது மக்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை கொடுத்துவந்தந்து.

இந்த நிலையில் நேற்று வீக் எண்ட் எபிசோடில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல கடந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இடையே நடைப்பெற்ற சலசலப்பு மற்றும் முகம் சுழிக்கும் விதமாக நடந்துக்கொண்ட செயல் என அனைத்தையும் விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசினார். மேலும் வன்முறையில் ஈடுபட்ட கம்ருதின் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படும் என்று நேரடியாக தெரிவித்தார். இந்த எபிசோடைப் பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியின் தரமான சம்பவத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் இன்று ஞாயிறு எபிசோடிலும் தொடர உள்ளது தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோ மூலம் தெரிகிறது.

Also Read… ராயன் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது – நடிகர் விஷ்ணு விஷால்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒவ்வொரு படத்திலும் மாரி செல்வராஜின் வளர்ச்சியை பார்க்க முடிகிறது – பைசன் படத்தைப் பாராட்டிய தயாரிப்பாளர்!