மீண்டும் பிக்பாஸில் நுழைந்த சாண்ட்ரா… வந்ததுமே தொடங்கிய சர்ச்சை… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் 4 பேர் ஃபைனலிஸ்ட்டுகளாக இருந்த நிலையில் முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.

மீண்டும் பிக்பாஸில் நுழைந்த சாண்ட்ரா... வந்ததுமே தொடங்கிய சர்ச்சை... வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

14 Jan 2026 10:52 AM

 IST

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பிரபலங்கள் பலருடன் நடைப்பெற்று வருகின்றது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்து மொத்தம் 7 சீசன்களுக்கு நடிகர் கமல் ஹாசன் தொகுப்பாளராக தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து தான் படங்களில் தொடர்ந்து நடிப்பதாலும் அரசியல் வேலைகள் காரணமாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை என்று நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க உள்ளது என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிரபார்த்து காத்திருந்த நிலையில் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு ஒளிபரப்பான 8-வது சீசனில் இருந்து இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வலம் வருகிறார். இவர் முதலில் போட்டியாளர்களின் குறைகளை எடுத்துக் கூறுவதில் தயக்கம் காட்டி வந்தாலும் போகப் போக ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு வெளிப்படையாக பேசி வருகிறார். இதன் காரணமாக ரசிகர்கள் விஜய் சேதுபதியின் நிகழ்ச்சித் தொகுப்பை கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் பிக்பாஸில் நுழைந்த சாண்ட்ரா:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதனப்டி இன்று கடந்த வாரம் வெளியேறிய சாண்ட்ரா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

வீட்டிற்குள் வந்த உடனே சர்ச்சையை கிளப்பும் விதமாக ரம்யா ஜோவிடம் பிரச்சனையை கிளப்புகிறார். அதன்படி அவர்கள் இருவரும் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் விக்ரமை தவிர்க்கும் முன்னாள் போட்டியாளர்கள்… சோகத்தில் விக்ரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் அப்டேட் எப்போது? வைரலாகும் தகவல்

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ