வழக்காடு மன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு… வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 10-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வழக்காடு மன்றம் டாஸ்க் நடைபெற உள்ளதாக தற்போது நிகழ்ச்சி குழு அறிவித்துள்ளது.

வழக்காடு மன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு... வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள்

பிக்பாஸ்

Published: 

09 Dec 2025 10:49 AM

 IST

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அதன்படி தற்போது 65-வது நாளை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே தொடர்ந்து நெகட்டிவான விமர்சனத்தையேப் பெற்று வருகின்றது. வைல்கார்ட் போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 24 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் கடந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் வெற்றிப்பெட்ட ரெட்ரோ சினிமா அணியினருக்கு இந்த வாரத்தின் நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வினோத், வியானா, கம்ருதின், சாண்ட்ரா, எஃப்ஜே, சபரி மற்றும் ரம்யா ஜோ ஆகியோர் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் ப்ராசசிற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த வாரம் வெற்றிப் பெற்ற ரெட்ரோ அணியினர் இந்த வாரத்திற்கான தல டாஸ்கில் பங்கேற்றனர். அதில் அமித் இறுதியாக வெற்றிப் பெற்றார். இதனால் இந்த 10-வது வாரத்திற்கான வீட்டு தலையாக அமித் தேர்வாகியுள்ளார். வைல்காட்ர்ட் போட்டியாளராக உள்ளே வந்த அமித் தற்போது முதன்முறையாக பிக்பாஸ் வீட்டில் வீட்டு தலையாகி உள்ளார். இவர் எப்படி தனது பதவியை பாதுகாத்துக்கொள்கிறார் என்பது இந்த வார இறுதி வரை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டு.

வழக்காடு மன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு:

இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடு வழக்காடு மன்றமாக மாறியுள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களது புகார்களை எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களது வன்மத்தை கொட்டிக்கொள்வதற்காகவே இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… ஜாலியாக ஒரு டிடெக்டிவ் படம் பார்க்கனுமா? இந்த தி பெட் டிடெக்டிவ் படத்தை ஓடிடியில் பாருங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… படையப்பா பட காட்சியை ரீ கிரியேட் செய்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?