Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026-ம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் மக்கள்… பிரபலங்கள் வெளியிட்ட வாழ்த்து பதிவு!

Celebrities Wishes For New Year 2026: இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் 2026-ம் ஆண்டிற்கான புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகளில் அவர்கள் என்னென்ன கூறியுள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

2026-ம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் மக்கள்… பிரபலங்கள் வெளியிட்ட வாழ்த்து பதிவு!
நடிகர்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jan 2026 16:17 PM IST

உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று 2026-ம் ஆண்டிற்கான புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களது புத்தாண்டு கொண்டாங்களை புகைப்படமாகவும், வீடியோவாகவும் தங்களது கொண்டாட்டத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா பிரபலங்களும் தென்னிந்திய சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை மட்டும் தெரிவிக்காமல் தங்களது புதுப் படங்களின் அப்டேட்களையும் தெரிவித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபலங்கள் தெரிவித்த வாழ்த்துப் பதிவு என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் தங்களது ஸ்டைலில் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வருகின்ற 09-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ஜன நாயகன் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் அவரது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜயின் பின்னால் நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம் என்ற திருமலை படத்தின் டயலாக் உடன் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அன்பான அரவணைப்புகளையும் நிறைய அன்பையும் அனுப்புகிறேன்! இந்த ஆண்டு அனைவருக்கும் அன்பும் செழிப்பும் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என்று கார்த்தி தெரிவித்து இருந்தார்.

நடிகர் சந்தானம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் சந்தானம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் நாகர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

என் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், உங்கள் இல்லத்தில் ஆனந்தத்தையும் கொண்டு வரட்டும் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் நாம எல்லாரும் சந்தோஷமா இருப்போம் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்தில் நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகர்களை வைத்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகின்றது.