அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது அரசன் படக்குழு… வைரலாகும் போட்டோ!

Silambarasans Arasan Movie Shooting Spot Photo Viral On Social Media: நடிகர் சிலம்பரசம் நடிப்பில் தற்போது அரசன் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அரசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது அரசன் படக்குழு... வைரலாகும் போட்டோ!

அரசன்

Published: 

17 Mar 2026 10:51 AM

 IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். மேலும் நடிகர் சிலம்பரசனின் நடிப்பு மட்டும் இன்றி அவரது நடனத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த அரசன் படத்தின் பணிகள் கடந்த 2025-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. முதல்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று 16-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு அரசன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற வட சென்னை படத்தின் காலத்தில் நடந்த கதை போலவே எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் வட சென்னை படத்தில் நடித்த நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது அரசன் படக்குழு:

சிலம்பரசன் TR மூன்று வெவ்வேறு காலகட்டங்களான 1980, 1992 மற்றும் 1995 ஆகியவற்றில் மூன்று விதமான தோற்றங்களில் தோன்றவுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஒரு கபடி வீரர், சென்னையில் ஒரு தாதாவாக உருவெடுக்கும் பயணத்தைச் சுற்றியே இக்கதை பின்னப்பட்டுள்ளது. சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விக்ராந்த் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி பட புகழ் சிறுவன் கமலேஷ் ஆகியோர் இப்பட்டியலில் புதிதாக இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் பட விவகாரம் சரியாகக் கையாளப்படவில்லை – பவன் கல்யாண்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வெய்ட் இஸ் ஓவர்… இன்று மாலை வெளியாகிறது சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர்

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்