விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ
Arasan Movie Shooting: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங்கில் எடுத்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை பாகம் இரண்டு. இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யும் விதமாக விடுதலை பாகம் இரண்டு இருந்ததாக பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதன்படி முன்னதாக இவர் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தின் பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வைரலான நிலையில் பின்பு சில காரணங்களால் படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டதாக வெளியானது. இதனைத் தொடர்ந்து எந்த நடிகரை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்:
இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சிம்புவை இயக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. படம் வருகின்ற 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் இருவரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… சூர்யா 47 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு…!
இணையத்தில் வைரலாகும் அரசன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்:
— Vetri Maaran (@Dir_Vetrimaaran) December 10, 2025
Also Read… திரைப்பட விழாவில் ரஜினியின் பாட்ஷா படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்