சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படத்துடன் மோதும் அனுஷ்காவின் ‘காதி’ – வசூலில் வெல்லப்போவது யார்?

Ghaati VS Madharaasi : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் அதிரடி ஆக்ஷ்ன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் காதி. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில், இந்த படமானது சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் மோதவுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் மதராஸி படத்துடன் மோதும் அனுஷ்காவின் காதி  - வசூலில் வெல்லப்போவது யார்?

காதி Vs மதராஸி

Updated On: 

07 Aug 2025 16:57 PM

 IST

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் (Anushka Shetty) முன்னணி நடிப்பில், உருவாகியிருக்கும் படம் காதி (Ghaati). இந்த படத்தைல் பிரபல தெலுங்கு இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி (Krish Jagarlamudi) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில், இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் தமிழ் பிரபல நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu) நடித்துள்ளார். அவர்  இந்த படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக களமிறங்குகிறார். இவரின் முன்னணி நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக இப்படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.  இந்நிலையில், இப்படத்தில் ரிலீஸ் தேதியும் டிரெய்லருடன் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம்.  அதே தேதியில் தான் தமிழில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) மதராஸி (Madharaasi) படமும், விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் திரைப்படமும்  வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த 3 படங்களில் வெற்றி பெறப்போவது எந்த படம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி… இந்தியாவில் எப்போது புக்கிங் ஓபன் ஆகுது தெரியுமா?

அனுஷ்கா ஷெட்டியின் காதி படத்தின் ட்ரெய்லர் பதிவு

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம்

தமிழ் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், மிகப் பிரம்மாண்டமாக  உருவாகியிருப்பது மதராஸி திரைப்படம். இதில் முன்னணி வேடத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மினி வசந்த் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் துப்பாக்கி பட வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ராந்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். கஜினி திரைப்படம் மற்றும் துப்பாக்கி திரைப்படத்தின் கலவையாக இந்தப் படமானது உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விமானத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ!

இப்படத்திற்கு  அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் 23வது படமாக இப்படமானது உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் வெளியீட்டின் போதுதான், அனுஷ்கா ஷெட்டியின் காதி படமும் வெளியாகவுள்ளது . மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படங்களுக்கு இடையே நிச்சயமாக பாக்ஸ் ஆபிஸ் மோதல் இருக்கும் என்பது உறுதி.