இந்த போட்டோவில் இருக்கும் குட்டி பாப்பா யார் தெரியுமா? இவரின் முதல் தமிழ் படம் தனுஷ் கூட தான்!

Actress Childhood Photo : சினிமாவை பொறுத்தவரையில் பல்வேறு நட்சத்திரங்கள் இருந்து வருகின்றனர். அவ்வப்போது இவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது வழக்கமே. அந்த விதத்தில் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தற்போது பிரபல நடிகை. இவங்க யாருனு தெளிவாக பார்க்கலாம்.

இந்த போட்டோவில் இருக்கும் குட்டி பாப்பா யார் தெரியுமா? இவரின் முதல் தமிழ் படம் தனுஷ் கூட தான்!

நடிகையின் சிறுவயது புகைபடம்

Published: 

13 Jan 2026 08:28 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் (South Indian Cinema) பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் இருந்துவருகின்றனர். தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழி பிரபலங்கள் தங்களின் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மற்றமொழி படங்களிலும் நடிகராகவும், நடிகையாகவும் நடித்துவருகின்றனர். அந்த வகையில் அந்த நடிகர்களின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிவருவது வழக்கம். அந்த விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள குட்டி பாப்பா யாருனு தெரியுமா?. இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரபல மலையாள நடிகை (Malayalam Actress) ஆவார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிகையாக நடித்த முதல் படத்தின் மூலமாகவே தென்னிந்திய முழுவதும் பிரபலமானார். அந்த விதத்தில் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் (Tamil Cinema) தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான திரைப்படத்தின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் அவருக்கு மக்களிடையே பிரபலத்தை கொடுத்தது. இவர் சமீபத்தில் ஒரு தமிழ் படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படத்தின் நடிகரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இப்போதாவது இந்த நடிகை யார் என தெரிகிறதா? அட இந்த நடிகை வேறுயாருமில்லை. பைசன் (Bison) படத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்தான் (Anupama Parameswaran).

இதையும் படிங்க: பிக்பாஸில் சாண்ட்ரா செய்த செயல்… வெளிப்படையாக பிரஜினடம் பேசிய திவ்யா

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் சினிமா பயணம் :

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த 1996ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியில் கேரளாவில் உள்ள இரிஞ்சாலகுடா என்ற பகுதியில் பிறந்தார். இவரின் குடும்பம் பக்கா மலையாளி. இவர் தனது சிறுவயது முதலே படங்களில் நடிக்கவேண்டும் என்றார் ஆர்வம் கொண்ட நிலையில், இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம்தான் பிரேமம். கடந்த 2015ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் மேரி ஜார்ஜ் என்ற வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மொத்தமாக மூன்று நடிகைகள் அதில் ஒருவராக இவர் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ரவி மோகனுக்காக மட்டும்தான் படம் ஓடும்.. பராசக்தி படத்தை பார்த்த பாடகி கெனிஷா பேச்சு!

இப்படம் இவருக்கு பிரபலத்தை கொடுக்க, தனது 3வது படத்திலே தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம்தான் கொடி. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு பிரபலத்தை கொடுக்க, மேலும் தெலுங்கு சினிமாவிலும் நுழைந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினர். இவர் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்ற படத்திலும் இறுதியாக நடித்திருந்தார். இதையடுத்து இவரின் நடிப்பில் தமிழில் லாக்டவுன் என்ற படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!