பெல்ஜியத்தில் கார் ரேஸிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித் குமார் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அதே போல தொடர்ந்து பல கார் பந்தையங்களில் கலந்துகொண்டு வெற்றியையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் பெல்ஜியம் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்று பிறகு மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

அஜித் குமார்
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பான் இந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக வெளியான பல ஹிட் படங்களின் ரெஃபரன்ஸ்களை இந்தப் படத்தில் பயன்படுத்தி இருந்த காரணத்தால் இது அவரது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்ததாகவும் நடிகர் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அஜித்குமார் 64 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் தனது கார் ரேஸிங் போட்டியிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
பெல்ஜியத்தில் கார் ரேஸிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித்:
அதன்படி நடிகர் அஜித் குமார் தொடர்ந்து பல கார் பந்தையங்களில் கலந்துகொண்டு வெற்றியையும் பெற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் பெல்ஜியத்தில் நடைப்பெற்ற 24எச் சீரிஸ் ஜிடி3 ப்ரோ-ஏஎம் போட்டியில் தனது அணியினருடன் அஜித் குமார் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை தட்டிக் தூக்கினார். தொடர்ந்து இதனை அனைவரும் கொண்டாடித்தீர்த்தனர். இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் அந்தப் போட்டியை முடித்துவிட்டு தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஜெயிலர் 2 படக்குழு
இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித் குமார் வீடியோ:
#AjithKumar Is Back to Chennai
pic.twitter.com/CkaOA2UQbe— Movie Tamil (@_MovieTamil) April 22, 2026
Also Read… ராக்கா படத்தின் இசையில் அட்லி அண்ணா தெளிவாக இருந்தார் – இசையமைப்பாளர் சாய் அபயங்கர்