பிக்பாஸில் ரம்யா ஜோவை தொடர்ந்து இன்று வெளியேறபோவது இவர்தான்… கசிந்தது தகவல்

Bigg Boss Tamil Season 9 House: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 10-வது வாரத்தின் நிறைவை அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் உள்ள நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா ஜோ வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் ரம்யா ஜோவை தொடர்ந்து இன்று வெளியேறபோவது இவர்தான்... கசிந்தது தகவல்

பிக்பாஸ்

Published: 

14 Dec 2025 10:43 AM

 IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த அக்டோபர் மாதம் 05-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மிகவும் பிரபமாண்டமாக தொடங்கப்பட்டது. முன்னதாக 20 போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனுப்பட்டனர். பிறகு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் 4 பேர் என மொத்தமாக 24 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். அதன்படி இந்தப் போட்டி தொடங்கி முதல் வாரம் முடிவதற்கு முன்னதாகவே நந்தினி என்ற போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து அவராகவே வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முதல் வாரம் இயக்குநர் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டி இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் அப்சரா, மூன்றாவது வாரம் ஆதிரை, 4-வது வாரம் கலையரசன், 5-வது வாரம் டபுள் எவிக்‌ஷனில் துஷார் மற்றும் பிரவீன் ராஜ், 6-வது வாரம் திவாகர், 7-வது வாரம் கெமி வெளியேற்றப்பட்ட நிலையில் 8-வது வாரம் பிக்பாஸில் நோ எவிக்‌ஷன் என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 9-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து பிரஜன் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் டபுள் எவிக்‌ஷன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் 13-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நேற்றையை சனிகிழமை எபிசோடுல் ரம்யா ஜோ குறைவான வாக்குகளைப் பெற்றதால் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் ரம்யா ஜோவை தொடர்ந்து இன்று வெளியேறபோவது இவர்தான்:

இந்த நிலையில் இன்று எவிக்‌ஷன் புராசசில் சபரி, கானா வினோத், எஃப்ஜே, வியானா மற்றும் கம்ருதின் ஆகியோர் உள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்று வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் வீட்டில் இருந்து வியானா வெளியேறியதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

Also Read… இனிமேல் அவர் நடிக்க மாட்டாரானு ஒரு வருத்தம் இருக்கு… விஜய் குறித்து எமோஷ்னலாக பேசிய அனிருத்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கிச்சா சுதீப்பின் மார்க் படத்தில் இணைந்த நடிகர் யோகி பாபு – போஸ்டர் வெளியிட்ட படக்குழு

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்