ஓடிடியில் வெளியாகியுள்ள தாய் கிழவி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Thaai Kizhavi Movie OTT Review Here: நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் தற்போது வெளியாகி உள்ளது.

தாய் கிழவி
தமிழ் சினிமாவில் பல நூறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகை ராதிகா சரத்குமார். இவர் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன போது தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பலப் படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து பிறகு நாயகன்களுக்கு அக்கா, அம்மா, அண்ணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமாரின் மகன்களாக நடிகர்கள் சிங்கம் புலி, அருள் தாஸ் மற்றும் பால முருகன் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் மகளாக நடிகை ரேச்சல் ரெபேக்கா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
ஓடிடியில் வெளியாகி உள்ள தாய் கிழவி படத்தின் விமர்சனம் இதோ:
ஊரையே மிரட்டும் பவுனுதாயி என்ற கிழவியின் கதாப்பாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்து இருந்தார். பவுனுத்தாயின் மகன்கள் சொத்து பிரச்சனை காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் மகள் மட்டும் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது மகனுடம் வாழ்ந்து வருகிறார். ஊர் முழுக்க பவுனுதாயிடம் வட்டிக்கு வாங்கி வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் பவுனுதாயி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக ஆனபிறகு அவரிடம் கடன் வாங்கியவர்கள் அனைவரும் சந்தோசப்படுகிறார்கள்.
Also Read… Jana Nayagan: பெரும் அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்.. இணையத்தில் லீக்கான ஜன நாயகன் பட 5 நிமிட காட்சி!
இப்படி இருக்கும் நிலையில் பவுனுதாயி 160 பவுன் தங்கம் வாங்கியதாக நகை ஆசாரி ஒருவர் வந்து சொல்ல அந்த நடைக்கு ஆசைப்பட்டு மகன்கள் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து தங்களது மனைவிகளின் நகைகளை விற்றும், பணத்தை கடன் வாங்கியும் காப்பாற்றுகிறார்கள். அதன்பிறகு பவுனுதாயி பிழைத்து வந்து அப்படி எதுவும் வாங்கவில்லை என்று சொல்ல மகன்கள் அதிர்ச்சியாகின்றனர். இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… இப்படி ஒரு முதலமைச்சர் இருந்தா எப்படி இருக்கும்? ஓடிடியில் இந்த ஒன் படத்தை பார்த்து இருக்கீங்களா